சென்னையில் பேருந்து மட்டும் செல்லும் சாலைகள்.. வந்தது பஸ் பே.. வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு!
சென்னை: சென்னை சாலை போக்குவரத்தில் அதிரடி மாற்றம் ஒன்று செய்யப்பட்டு உள்ளது. பேருந்துகள் மட்டும் செல்லும் வகையில் பஸ் பேக்களை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. சமீபத்தில் சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

சமீபத்தில் எஸ்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும்.
சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசல். இதை குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும், என்று உத்தரவிட்டு இருந்தார்.
சென்னை பஸ் பே: இந்த நிலையில்தான் சென்னை சாலை போக்குவரத்தில் அதிரடி மாற்றம் ஒன்று செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ஆட்டோக்களுக்கும் கட்டுப்பாடு ஒன்று கொண்டு வரப்பட்டு உள்ளது அதன்படி ஆட்டோக்கள் பஸ் பேயில் செல்ல கூடாது. அங்கே நிற்க கூடாது என்று கொண்டு வரப்பட்டு உள்ளது.
பஸ் பே என்றால் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு முன் சில மீட்டர்களுக்கு தூரத்திலேயே பஸ் பே ஆரம்பிக்கும். இதில் பேருந்துகளை தவிர வேறு வாகனங்கள் செல்லாது. அதன்பின் பேருந்து நிறுத்தும் முடிந்து சில மீட்டர்கள் வரை இந்த பே தொடரும். இதில் பேருந்துகள் மட்டுமே செல்லும். பேருந்துகள் நடு ரோட்டில் நிற்பதையும், அங்கேயே பயணிகளை ஏற்றி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதையும் தடுக்கும் விதமாகவும், பேருந்துகள் எளிதாக இங்கும் அங்கும் செல்வதை உறுதி செய்யும் விதமாக இந்த விதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
சென்ட்ரல் முதல் தாம்பரம் வரை கிண்டி மற்றும் சிஎம்பிடி முதல் கிண்டி வரை சென்னையின் இரண்டு முக்கிய வழித்தடங்களில் 'பஸ் பே' பாதைகளை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் MTC பேருந்துகளுக்கு ஒரு பாதை முழுமையாக அர்ப்பணிக்கப்படும். மேலும் MTC பேருந்து நிறுத்தங்களை ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியில் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது 'பஸ் ஃபர்ஸ்ட்' திட்டத்தின் கீல் செயல்படுத்தப்படும், அங்கு பேருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு: சமீபத்தில்தான் தலைமைச் செயலாளர் அவர்கள் மண்டலம் வாரியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மூன்றாவது ஆய்வுக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சீரான போக்குவரத்து குறித்தும், நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள்.
இக்கூட்டத்தில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் ஆகிய துறைகள் மேற்கொண்டு வரும் சாலை வெட்டு அறிவுறுத்தினார்கள். முடிக்குமாறு மேலும், மண்டலம் வாரியாக பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர், உதவி ஆணையர், போக்குவரத்து காவல் துறை, உதவி செயற் பொறியாளர், நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் அலுவலர் மற்றும் உதவி செயற் பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கள ஆய்வு செய்து போக்குவரத்து தடையின்றி செல்வதை உறுதி படுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications