ஹே எப்பூடி? சென்னையில் வரப்போகும் புதிய "பீச்".. மாநகராட்சியின் சூப்பர் பிளான்.. மக்கள் குஷி!
சென்னை மெரினா பீச்சில் இருந்து கோவளம் வரை இருக்கும் பகுதி முழுக்க புனரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை: சென்னையில் காசிமேடு பகுதியில் மக்கள் பயன்பாடு இன்றி இருக்கும் கடற்கரை பகுதியை சுத்தம் செய்து சுற்றுலாதளமாக மாற்ற உள்ளனர்.
எலியட்ஸ் பீச், மெரினா பீச், திருவான்மியூர் பீச் என்று சென்னையில் பல்வேறு பீச்கள் இருக்கின்றன. சென்னை மெரீனாவை சர்வதேச தரத்திற்கு மாற்றுவதற்கான பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. முக்கியமாக இங்கே பல புதிய சுற்றுலா அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன, சென்னையின் அடையாளங்களில் ஒன்று மெரினா பீச். உலகின் இரண்டாவது பெரிய பீச்.
இந்தியாவின் மிகப்பெரிய பீச்தான் சென்னை மெரினா பீச். மொத்தமாக 12 கிமீ நீளம் கொண்ட இயற்கையான கடற்கரை இது. இந்த நிலையில் மெரினா கட்டுரையில் லைட் ஹவுஸ் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை இருக்கும் சாலையில் பல அலங்கார அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரைகள்
அதே சமயம் சென்னையில் பயன்படுத்தப்படாத பல்வேறு பீச்களும் கூட இருக்கின்றன. வெறும் கடற்கரைகளாக, குப்பை கொட்டும் இடங்களாக, மீனவர்கள் மட்டும் செல்லும் இடங்களாக பல்வேறு பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளை சரி செய்து, சரியாக பயன்படுத்த தொடங்கினால் மக்கள் வரத்து இங்கே அதிகம் ஆகும். அதேபோல் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகம் ஆகும். அதன்படி காசிமேடு பகுதியில் மக்கள் பயன்பாடு இன்றி இருக்கும் கடற்கரை பகுதியை சுத்தம் செய்ய உள்ளனர்.

கடற்கரை சுத்தம்
வரும் நாட்களில் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பாரதி நகர் இடையே உள்ள பகுதியை சுத்தம் செய்து, அதை அழகுபடுத்த உள்ளனர். அதன்பின் இதை மக்கள் பயன்படுத்தும் வகையில் சுற்றுலா பீச்சாக மாற்ற உள்ளனர். இங்கே தற்போது பழைய படகுகள் மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளன. இங்கே நடைமேடை அமைப்பது, மண் பகுதியை சுத்தம் செய்வது, விளக்குகளை போடுவது, அலங்கார அமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற மாற்றங்களை செய்ய உள்ளனர். இதன் மூலம் மக்கள் பயன்படுத்தும் புதிய பீச்சாக இது உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

பீச்
இது போக சென்னை மெரினா பீச்சில் இருந்து கோவளம் வரை இருக்கும் பகுதி முழுக்க புனரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இங்கே புதிய சுற்றுலா தளங்களை அமைப்பது, வாட்டர் விளையாட்டுகளை ஏற்படுத்துவது, மீனவர்களுக்காக ஜெட் போட்டுகளை வழங்குவது. புதிய பூங்காக்கங்களை ஏற்படுத்துவது. அதேபோல் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்ல வசதிகளை ஏற்படுத்துவது என்பது போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் சாட்டிலைட் பீச் ஒன்றை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மெரினா பேச்சில் இணைப்பு சாலை பகுதியில் இருக்கும் பயன்படுத்தப்படாத பகுதிகளை தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி கழகம் சுத்தம் செய்து வருகிறது.

சாட்டிலைட் பீச்
இங்கே இருக்கும் குப்பைகளை அகற்றி, பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும் பகுதிகளை புனரமைத்து வருகிறது. அதாவது நொச்சி குப்பம், டோம்மிங் குப்பம் பகுதியில் இருக்கும் மெரினாவில் வடக்கு பகுதியைத்தான் சுத்தம் செய்து வருகின்றனர். மெரினா மெயின் கடற்கரைக்கு கொடுக்கப்படும் கவனிப்பு முன்பெல்லாம் இந்த பகுதிக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. இந்த இடம்தான் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதோடு இங்கே வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்ல வசதிகளை ஏற்படுத்துவது என்பது போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த பகுதியைத்தான் துணை பீச்.. அதாவது சாட்டிலைட் பீச் என்று அழைக்க உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications