புதிதாக 2 வந்தே பாரத்.. சென்னை டூ நாகர்கோவில், மதுரை - பெங்களூர்! ரூட், நேரம் இதுதான்.. முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் சென்னை டூ நாகர்கோவில், மதுரை டூ பெங்களூர் வழித்தடத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை வரும் 31 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், ரயில் புறப்படும் நேரம், வழித்தடம் உள்ளிட்டவை பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 31 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொலி காட்சி வாயிலாக சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலையும், மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

2 புதிய சேவை: தமிழகத்தில் ஏற்கனவே சென்னை- நெல்லை, பெங்களூர் - சென்னை, சென்னை- விஜயவடா, கோவை - பெங்களூர், சென்னை- கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
புறப்படும் நேரம்: இதனிடையே இந்த ரயில்கள் இயக்கப்படும் நேரம், வழித்தடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு இன்ப்ரா தனது எக்ஸ் தளத்தில் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும். தாம்பரத்திற்கு 5.23 மணிக்கு சென்று சேரும். 2 நிமிடங்கள் தாம்பரத்தில் நிற்கும் இந்த ரயில் 5.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் (6.52/6.55 - வரும் நேரம் / புறப்படும் நேரம்) , திருச்சி (8.55 / 9.00), திண்டுக்கல் (9.53 / 9.55), மதுரை (10.38 / 10.40), கோவில் பட்டி (11.35 / 11.37), நெல்லை (12.30 / 12.32) வழியாக நாகர் கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்து சேரும்.
நாகர்கோவிலில் இருந்து எப்போது?: மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நெல்லை (3.18/3.20), கோவில் பட்டி (3.58/4.00), மதுரை (5.03/5.05), திண்டுக்கல் (5.48/5.50), திருச்சி (6.45/6.50), விழுப்புரம் (8.53/8.55), தாம்பரம் (10.28/10.30) வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்து சேரும். இந்த வந்தே பாரத் ரயில் மொத்தம் 16 பெட்டிகள கொண்டது ஆகும்.
மதுரை - பெங்களூர் ரூட்: அதேபோல மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நேரமும் வெளியாகியுள்ளது. மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல் (5.59 / 6.01), திருச்சி (6.50 / 6.55), கரூர் (8.08 / 8.10), நாமக்கல் (8.32 / 8.34), சேலம் (9.15 / 9.20) கிருஷ்ணராஜபுரம் (12.50 / 12.52), வழியாக பெங்களூர் கண்ட் ரயில் நிலையத்திற்கு 1 மணிக்கு வந்து சேரும்,.
மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கிருஷ்ணராஜபுரம், சேலம் (4.50 / 4.55), நாமக்கல், கரூர் (5.58 / 6.00), திருச்சி (7.20 / 7.25) திண்டுக்கல் (இரவு 9.08 / 9.10), வழியாக 9.45 மணிக்கு மதுரை வந்து சேரும். தெற்கு ரயில்வே இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications