கோவா எல்லாம் ஓரமா போங்க! சென்னை டூ புதுச்சேரி.. இனி மிதந்தே போகலாம்.. அரசின் ஆபரேஷன் க்ரூஸ்!
சென்னை: நாளை சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் போக்குவரத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலா அதிகம் நடைபெறும் மாநிலங்களில் இப்போதும் தமிழ்நாடுதான் நம்பர் 1ல் இருக்கிறது. இருந்தாலும் வெளிநாட்டு பயணிகள் பலரை கவரும் மாநிலங்களில் கேரளா, கோவா ஆகியவை முன்னிலையில் உள்ளன.
இரண்டு மாநிலங்களிலும் கப்பல் போக்குவரத்து அதிக பிரபலம். கேரளாவில் உள்ளூரில் ஓடும் நதிகளிலேயே போட் ரைட் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் மிகப்பெரிய வருவாயும் ஈட்டப்படுகிறது.

க்ரூஸ் கப்பல்
அதேபோல் கோவாவில் போட் ரைடுகள், க்ரூஸ் கப்பல் பயணங்கள் என்று சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல அம்சங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் பல்வேறு பீச்கள் இருந்தும் கூட இது போன்ற கப்பல் பயண சேவைகள் அளிக்கப்படுவது இல்லை. இது போன்ற சேவைகளை ஏற்படுத்துவதன் மூலம் சென்னைக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் சென்னைக்கு வருவாயும் பெருகும்.

கப்பல் போக்குவரத்து
இந்த நிலையில் சென்னையில் விரைவில் ஆழ் கடல் கப்பல் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்து இருந்தார். அதன்படியே நாளை சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு க்ரூஸ் கப்பல் போக்குவர்த்து தொடங்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார். கார்டெலியா க்ரூஸ் ( Cordelia Cruise) நிறுவனம் இதற்காக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

செலவு எவ்வளவு
இதன் மூலம் சென்னையில் இருந்து சொகுசு க்ரூஸ் கப்பலில் புதுச்சேரி செல்ல முடியும். சென்னை துரைமுருகத்தில் அரசு - தனியார் ஒப்பந்தத்தில் இந்த பயணம் தொடங்கப்பட உள்ளது. ஆனால் இந்த பயணத்திற்கு கொஞ்சம் தொகைதான் ஜாஸ்தி, சென்னை - புதுச்சேரிக்கு சென்று வரை, இரண்டு நாள் பயணமாகி ஒரு ஆளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதில் உணவு, தங்கும் இடம் எல்லாம் அடக்கம். இந்த கப்பல்கள் சொகுசு கப்பல் ஆகும்.

எத்தனை நாட்கள்
இது போக 5 நாட்கள் கப்பலில் இருக்க முடியும். இது சென்னை விசாகப்பட்டினம் புதுச்சேரி ரூட் ஆகும். இந்த பயணத்திற்கு மொத்தம் ஒரு ஆளுக்கு 45 ஆயிரம் செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. பல பொழுது போக்கு வசதிகள், மினி பார், பெரிய பெரிய உணவகங்கள், மசாஜ் செய்யும் இடங்கள் என்று பல ஆடம்பர வசதிகளுடன் இந்த கப்பல்கள் இருக்கும். வெளிநாட்டு பயணிகள் பலரை கவரும் வகையில் இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

முன்னேறும்
தமிழ்நாடு சுற்றுலா துறையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. சுற்றுலா துறையின் மூலம் கொரோனாவிற்கு பின் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்று அரசு நம்புகிறது. இந்த நிலையில்தான் முதல் கட்டமாக சென்னை புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து செய்யப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் இந்த பயணத்தில் 2000 ஆயிரம் பேர் பயணம் செய்வார்கள். மாதத்திற்கு 30000 பேர் வரை இந்த கப்பலில் பயணம் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications