AC பயன்பாடு.. இந்தியாவின் 7 பெரிய நகரங்களில் சென்னை தான் டாப்.. குளிரூட்டும் கேஸில் இருக்கும் ஷாக்
சென்னை: 'இன்டர்நேஷனல் ஃபோரம் ஃபார் என்விரான்மென்ட், சஸ்டைனபிலிட்டி அண்ட் டெக்னாலஜி (iFOREST)' என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ள ஏழு பெரு நகரங்களில் சென்னையில் தான் ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சென்னையில் உள்ள வீடுகளில் தினமும் சராசரியாக 4.4 மணிநேரம் ஏசி பயன்படுத்தப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மொத்த வீடுகளில் 23% வீடுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட ஏசிக்கள் இருக்கிறது. இது தேசிய சராசரியை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
இந்த பூமிய வெப்பமயமாக காரணம் ஏசி பயன்படுத்துவது முக்கியமான காரணம் ஆகும். நம் வீட்டை, அலுவலகத்தை குளிர்விப்பதற்காக ஏசியை பயன்படுத்துவதால், பூமியை வெப்பமாக்கி வருகிறோம். காலநிலை மாற்றத்திற்கு ஏசி பயன்பாடு தான் முக்கியமான காரணம் ஆகும்.

காலநிலை மாற்றம் என்றால் என்ன
பூமி வெப்பத்திற்கும், கால நிலை மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம்.. கால நிலை மாற்றம் என்பது என்ன.. காலநிலை மாறுவது என்பதை எளிதாக சொல்வது என்றால், 2015, 2023ல் சென்னையில் ஏற்பட்ட அதீத மழை, 2019ல் சென்னையில் ஏற்பட்ட அதீத வறட்சி ஆகியவற்றை கூறலாம். அதேபோல் இப்போது இமாச்சலில் பெய்து வரும் பேய்மழையும் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படுவது தான். சுருக்கமாக சொல்வது என்றால், பூமி மழையை சரியாக பகிராமல் ஒரு இடத்தில் ஒரு முறை மிக அதிகமாகவும், இன்னொரு இடத்தில் வறட்சியாகவும் மாற்றிவிடும்.
பூமி வெப்பமாக ஏசி காரணம்
அதேநேரம் கடும் வறட்சியை சந்தித்த பகுதியில், மீண்டும் அதீத மழை பெய்து வெள்ளக்காடாக மாறும். சென்ற வருடம் கடும்வெள்ளத்தை சந்தித்த பகுதி, அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்தடுத்த காலங்களில் கடும் வறட்சி ஏற்படும். இப்படி, வறட்சி மற்றும் பேய் மழை என மாறி மாறி இருப்பது தான் காலநிலை மாற்றம். இந்த காலநிலை மாற்றத்திற்கு பூமி வெப்பமயமாகுவது தான் காரணம். பூமி வெப்பமாக பல காரணம் என்றாலும்,அதில் ஏசி தான் முக்கியமான காரணம்.
தங்கம் விற்ற நாதெள்ளா ஜூவல்லரி.. எல்லாமே காலி.. 163 கோடி சொத்தினை வங்கியிடம் ஒப்படைத்த அமலாக்கத்துறை'
சென்னையில் ஏசி பயன்பாடு அதிகம்
அதே நேரம் பூமி வெப்பமயமாகி வருவதால் ஏசி என்பது இன்றைக்கு அத்தியாவசியமான ஒரு பொருளாக மாறிவிட்டது. எனினும் இந்த ஏசிக்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது. 'இன்டர்நேஷனல் ஃபோரம் ஃபார் என்விரான்மென்ட், சஸ்டைனபிலிட்டி அண்ட் டெக்னாலஜி (iFOREST)' என்ற நிறுவனம், இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, ஜெய்ப்பூர் மற்றும் சென்னை உள்பட ஏழு பெரிய நகரங்களில் 3,100 பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த புதிய ஆய்வின்படி, சென்னையில்தான் ஏசி பயன்பாடு மற்ற நகரங்களை விட மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
23 சதவீதம் வீடுகளில் இரண்டு ஏசிக்கள்
சென்னையில் வீடுகளில் தினமும் சராசரியாக 4.4 மணிநேரம் ஏசி பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை மாநகரில் மொத்த வீடுகளில் 23% வீடுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட ஏசிக்கள் உள்ளன. இது தேசிய சராசரியை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகம். அதாவது தேசிய அளவில் உள்ள ஏசிக்ககளின் சராசரியை விட அதிகம் ஆகும்.
சென்னையில் விழிப்புணர்வு குறைவு
அதேநேரம் ஏசிகளில் குளிரூட்ட பயன்படுத்தப்படும் வாயுக்களால் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, சென்னை மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னையில் பதிலளித்தவர்களில் 64% பேர் சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிரூட்டிகள் குறித்துத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்கள். விலை குறைவாக இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு உகந்த ஏசிக்கு மாறுவோம் என்று 16% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இது மற்ற நகரங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவான எண்ணிக்கை என்று ஆய்வை நடத்திய நிறுவனம் கூறியுள்ளது.
ஏர் கண்டிசனரில் (Refrigerant) கேஸ் கசிவுப் பிரச்சினை
சென்னையில் ஏசிகளில் குளிரூட்ட பயன்படுத்தும் கேஸ்களை மீண்டும் நிரப்பும் விகிதம் மற்ற ஏழு நகரங்களை விட அதிகம் ஆகும். இங்குள்ள குடியிருப்பு ஏசிகளில் பாதிக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் குளிரூட்டி டாப்-அப் செய்யப்படுகிறது. இப்படி டாப் அப் செய்யப்படும் விகிதத்தை பொறுத்தவரை, நாட்டின் தேசிய சராசரியான 41%-ஐ விட அதிகமாகும்.
ஏசியில் கேஸ் நிரப்ப என்ன செலவு
பொதுவாக, ஒரு ஏசி முறையாகச் செயல்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வாயுவை நிரப்ப வேண்டியிருக்கும். ஆனால், இந்தியாவில், கசிவைச் சரிசெய்யாமல், மீண்டும் மீண்டும் நிரப்புவது ஒரு வழக்கமாக இருக்கிறதாம். இந்த வழக்கம் நிதி மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வு நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. எப்படிப்பட்ட பாதிப்பு என்றால், சென்னையில் ஒவ்வொரு முறை ஏசியில் கேஸ் நிரப்ப சராசரியாக ₹2,300 செலவாகிறது. இது நாட்டிலேயே அதிகபட்ச செலவு ஆகும்.
வாயுக்கள் கசியக்கூடாது
அதேநேரம் ஏசிகளில் குளிரூட்ட பயன்படுத்தப்படும் வாயுக்கள் (ஹைட்ரோஃப்ளோரோகார்பன்கள், ஹைட்ரோகார்பன்கள் ) வளிமண்டலத்தில் கசியக்கூடாது. ஆனால், கசிவுகளைச் சரிசெய்யாமல் மீண்டும் நிரப்பும்போது, அது மீண்டும் கசிந்து காற்று மண்டலத்தில் கலக்கிறது. இந்த வாயுக்களைப் பிடிப்பதற்கான உபகரணங்கள் இல்லாததால், பழைய குளிரூட்டிகள் பெரும்பாலும் நேரடியாகக் காற்றில் வெளியேற்றி விடுகின்றன. இந்த வாயுக்கள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், மிக சக்திவாய்ந்தவை. ஏசியை குளிர்விக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் HFC-32 (ஹைட்ரோஃப்ளூரோகார்பன்- 32 ) என்ற கேஸ், கரியமில வாயுவை (CO₂) விட 675 மடங்கு அதிக புவி வெப்பமயமாதல் திறனைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் என்ன புகார்கள்
இதனால் ஏசிக்களில் கேஸ் கசிவுகளின் ஒட்டுமொத்தத் தாக்கம் பூமியில் மிக அதிகம் ஆகும். iFOREST கணக்கீட்டின்படி, 2024-ல் ஏசியில் கேஸ் கசிவு மட்டும் 52 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான மாசுவை ஏற்படுத்தியுள்ளது. இது லட்சக்கணக்கான கார்களின் ஆண்டு மாசுக்குச் சமம் ஆகும். சென்னையில் ஏசி சேவை புகார்களில் 73% கேஸை நிரப்புதலுடன் தொடர்புடையவை என்பது அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது ஏசி தொடர்பான தொழில்நுட்ப வல்லுநர்களின் பயிற்சி மற்றும் சேவையின் தரக்குறைவை வெட்டவெளிச்சமாக காட்டுவதாக ஆய்விர்ல தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஏசிக்களில் சிக்கல்
'இந்தியா கூலிங் ஆக்ஷன் பிளான்' 2037-38-க்குள் ஏசியின் தேவையை 25%-30% குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த ஆய்வின்படி, அதைச் செயல்படுத்தத் தேவையான சட்டங்கள் இன்னும் குறைவாகவே இருக்கின்றன. 2023-ம் ஆண்டு மின்-கழிவு விதிகளின்படி (E-Waste Rules), பழைய ஏசிகளில் இருந்து Refrigerant என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழைய கேஸ்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், அதன் அமலாக்கம் பலவீனமாக இருக்கிறது.
கடுமையான சட்டம் வேண்டும்
பழைய கேஸை மீட்டெடுப்பது, மறுசுழற்சி செய்வது, தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிப்பது மற்றும் ஏசி தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பொறுப்புணர்வு போன்ற கடுமையான சட்டங்களை இந்தியா அமல்படுத்த வேண்டும் என்று iFOREST அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications