சென்னை திரும்பும் மக்கள் கவனத்திற்கு.. 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து சென்னைக்கு திரும்புவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, 2 நாட்களுக்கு போலீசார் போக்குவரத்து மாற்றங்கள் செய்திருக்கிறார்கள்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்தது. வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றதால், சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வார இறுதி விடுமுறையையும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களிலேயே கழித்தனர். சென்னையில் இருந்து பயணிப்போருக்கு சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் விடுமுறை முடிவடைந்து நேற்றிரவு முதலே பலரும் சென்னை திரும்ப தொடங்கி இருக்கின்றனர். சொந்த வாகனங்களில் பயணிப்போர், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்று சென்னை போலீஸ் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை திரும்பும் மக்கள் வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய இரு நாட்களிலும் தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சென்று சென்னையை அடையலாம்.
அதேபோல் சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பிவிடப்படும். அங்கிருந்து வந்த வாகனங்கள், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னையை அடையலாம். மேலும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் ஈசிஆர் சாலை, ராஜீவ் காந்தி சாலையை பயன்படுத்தி சென்னைக்குள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications