ஸ்தம்பித்த சென்னை.. 3 கிமீ அணிவகுத்த வாகனங்கள்.. கடும் போக்குவரத்து நெரிசலால் முடங்கிய ஜிஎஸ்டி சாலை
சென்னை: தொடர் விடுமுறை முடிந்து மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் 27 ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து கடந்த 1ம் தேதி(புதன் கிழமை) ஆயுத பூஜையும், 2ம் தேதி (வியாழக்கிழமை) தசராவும் கொண்டாடபட்டது.

இந்த 2 நாள் விடுமுறையை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அலுவலகங்களில் விடுமுறை எடுத்தனர். அதன்பிறகு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 5 நாள் விடுமுறையில் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இன்றுடன் விடுமுறை அனைத்தும் முடிவுக்கு வருகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதேபோல் அலுவலக பணிகளுக்கும் செல்வதற்காக அனைவரும் இன்றே தங்களின் சொந்த ஊர்களில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கார்கள், பஸ்கள், வேன்களில் பலரும் சென்னை நோக்கி பயணித்து வருகின்றனர்.
இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை புறநகர் பகுதிகளில் இன்று மாலையில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இது போக்குவரத்து நெரிசலை இன்னும் அதிகரித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் சென்னை நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அணிவகுத்து நிற்பதோடு மெதுவாக நகர்ந்து செல்கின்றன.
அதேபோல் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்கள் நகர முடியாமல் நகர்ந்து செல்வதால் அந்த சாலை ஸ்தம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications