நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல.. வீடியோ எடுத்தவருக்கும் அபராதம்.. எத்தனை விஷயங்களுக்கு தெரியுமா?
சென்னை: சென்னை பனையூரில் நடிகர் விஜய்யை பின்தொடர்ந்து சென்று வீடியோ எடுத்தவரின் வாகனத்திற்கு போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்பட்டதற்காக 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகர காவல்துறை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே சிக்னலை மீறியதாக நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
நடிகர் விஜய் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அரசியலில் கண்டிப்பாக இறங்குவார் என்று கூறும் விஜய் ரசிகர்கள் அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை நீண்ட காலம் முன்பே விஜய் தொடங்கிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டார். விஜய் ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் ரத்த தானம் செய்வது, ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, அன்னதானம் செய்வது, முதியோர் இல்லங்களில் உதவுவது போன்ற பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறார்கள். இதனை விஜய்யும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழா மேடைகளில் தனது ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வரும் விஜய், அந்த மேடைகளில் அடிக்கடி அரசியலும் பேசினார்.
இந்நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணிசமாக வெற்றியும் பெற்றார்கள். இதையடுத்து உற்சாகம் அடைந்த விஜய், பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் அடிக்கடி தனது ரசிகர்ளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த ஜூன் 17 ஆம் தேதி விஜய் 234 தொகுதியில் இருந்தும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளித்தாதோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்தார். அப்போது விஜய் நேரடியாகவே அரசியல் பேசினார்.
இதனால் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியானது. 234 தொகுதிகளில் இருந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னைக்கு அழைத்தார். அதன்படி சென்னை பனையூரில் உள்ள இல்லத்திற்கு 234 தொகுதியில் இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கடந்த ஜூலை 11ம் தேதி வந்தனர். அவர்களிடம் ஆலோசனை நடத்திய விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் பனையூரில் இருந்து புறப்பட்டு தனது இல்லத்திற்கு சென்றார்.
நடிகர் விஜய் அன்று மாலை காரில் பனையூருக்கு வரும் அக்கரை அருகே சிக்லை மதிக்காமல் சென்றாக வீடியா ஒன்று வெளியானது. அந்த வீடியோவிற்கு பிறகு நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய் வாகனம் சிக்னலில் நிற்கவில்லை என்று கூறி வீடியோ எடுத்தவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர் ஒருவர் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, சிக்னலைமீறி சென்றதாக வாகன எண், இடம் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளித்தார்.
இந்த புகாரை ஏற்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சிக்னலை மீறிய குற்றத்திற்கு 500 ரூபாய்,ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவரும், வாகனத்திற்கு பின்னால் அமர்ந்தவரும் வந்த குற்றங்களுக்காக 200 ரூபாய் என மொத்தம் 2500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகர காவல்துறை தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை யார்போக்குவரத்து விதிமீறல் செய்தாலும்,ஜஸ்ட் புகைப்படம் எடுத்து ,நேரம் நாள், குறிப்பிட்டு சென்னை மாநகர காவல்துறையை டேக் செய்தால் போதும்.காவல்துறையினர் சிசிடிவியை ஆய்வு செய்து அவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். இது இங்குள்ள பொதுவான நடைமுறை. அந்த அடிப்படையில் தான் விஜய்க்கும், விஜய்யை சிக்னலை மீறி சென்று வீடியோ எடுத்தவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications