Chennai Train: சென்னையில் இந்த 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி எக்மோரில் இருந்து புறப்படாது.. பயணிகள் கவனம்!
சென்னை: சென்னை (Chennai Train) எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, கொல்லம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 3 ரயில்கள் பிப்ரவரி முதல் - ஏப்ரல் மாதம் வரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எனவே பயணிகள் இதற்கு ஏற்றது போல் தங்கள் பயண திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.

Chennai Train - சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி எழும்பூர் ரயில் நிலையட்திலும் பல சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகள் காரணமாக சில ரயில் சேவைகள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக
தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
* தஞ்சாவூர் - எழும்பூர் இடையிலான உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் - 16866),
* கேரளா மாநிலம் கொல்லம் - எழும்பூர் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (20636),
* ராமேசுவரம்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16752),
ஆகிய 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதேபோன்று மறுமார்க்கத்தில்,
* எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் (16865),
* எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (20635),
* எழும்பூர் - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் (16751) ஆகியன பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
மேலும் சில ரயில்கள்
* எழும்பூர் - மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
* அகமதாபாத் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண்- 09419) வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி இந்த ரயிலானது பிப். 5, 12, 19, 26, மாா்ச் 5, 12, 19, 26, மாா்ச் 2 ஆகிய தேதிகளில் அரக்கோணம் ஜங்ஷன், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் வழியாக செல்லாமல், ரேனிகுண்டா, அரக்கோணம் வடக்கு, மேலப்பாக்கம், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
* மறுமாா்க்கத்தில், திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயிலல் (09420) வரும் பிப். 8, 15, 22, மாா்ச் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் ஜங்ஷன் ரயில் நிலையங்கள் வழியாக செல்லாமல், மாறாக வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, மேலப்பாக்கம், திருத்தணி, ரேனிகுண்டா வழியாக இயக்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதற்கு ஏற்றது போல் தங்கள் பயண திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications