Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு அதிரடி.. இனி காலியாலாம் பஸ் ஓட்ட முடியாது.. ஓட்டுநர், நடத்துனர்களுக்கு "முக்கிய" ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊதிய உயர்வுக்காக அரசுக்கு ஏற்படும் செலவை ஈடு செய்யும் வகையில், அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மக்களின் அன்றாட போக்குவரத்தில் பெரும் பங்கு வகிப்பது அரசுப் பேருந்துகள்தான். வழக்கமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன. பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் அரசு பேருந்துகளால் லாபம் ஈட்டுவது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

டீசல் கட்டணம் மட்டுமல்லாமல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கே பெரும் தொகை செலவாகி வருகிறது.

பேருந்து

பேருந்து

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒருபுறம் இருக்க, தற்போது பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் அரசுக்கு கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இலக்கு

இலக்கு

14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாதத்திற்கு ரூ.10 கோடி தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக மாதத்திற்கு ரூ.3.40 கோடி வருவாய் வருகிறது. மீதமுள்ள ரூ.6.60 கோடியை பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாக மட்டுமே வசூலிக்க வேண்டும். இதன் காரணமாக, பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

வருவாய்

வருவாய்

எனவே, வருவாயை அதிகரிக்கவும் நிதிச்சுமையை குறைக்கவும் அரசு பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை டிக்கெட் விற்பனை மூலமாக வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து மண்டல மேலாளர்களும் பின்பற்றுமாறும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து கழகத்தில் பணியாற்றக்கூடிய பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு டீசல் சிக்கனத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

 பயணிகள்

பயணிகள்

இந்த சூழலில், டிக்கெட்டுகளை முறையாக விற்பனை செய்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்காக பேருந்து மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது பேருந்தில் முழுமையாக பயணிகளை ஏற்ற வேண்டும். குறைந்த பயணிகளோடு செல்ல கூடாது. பேருந்து நிறுத்தங்களில் முறையாக நின்று பயணிகளை ஏற்ற வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்துகளுக்கு வருமானம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது/

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+