‛‛இளங்காத்து வீசுதே’’.. சென்னை அரசு பஸ்களில் பேட்டரி ஃபேன்! வெயில் கொடுமையால் சூப்பர் ஏற்பாடு
சென்னை: வெயிலில் இருந்து டிரைவர்களை காக்கும் வகையில் சென்னை மாநகர அரசு பஸ்களில் பேட்டரி மின்விசிறி பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் காலம் தொடங்கியது. ஆனாலும் கூட காலநிலை மாற்றத்தால் வெயில் தணிந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இருப்பினும் கூட மீண்டும் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் வெயிலில் இருந்து டிரைவர்களை காக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பஸ்களில் டிரைவர்களின் இருக்கை அருகே பேட்டரி ஃபேன் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மொத்தம் 1,000 பஸ்களில் பேட்டரி ஃபேன் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டிரைவர் இருக்கையின் முன்பு அல்லது பின்புறம் இந்த பேட்டரி ஃபேன் பொருத்தப்பட்டு வருகிறது.
தற்போது வரை 250 பஸ்களில் பேட்டரி ஃபேன் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 750 அரசு பஸ்களில் வரும் நாட்களில் பேட்டரி ஃபேன் பொருத்தப்பட உள்ளது. பொதுவாக டிரைவர்கள் நீண்ட நேரம் அமர்ந்து பஸ் ஓட்டுவதால் என்ஜின் சூடு அவர்களை பாதிக்கும். இத்தகைய சூழலில் கடும் வெயில் என்பது அவர்களுக்கு கூடுதல் சிரமத்தை அளிக்கிறது.
இதனால் டிரைவர்களை காக்கும் வகையில் சென்னை மாநகர அரசு பஸ்களில் பேட்டரி ஃபேன் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் டிரைவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications