தீபாவளி கூட்ட நெரிசல்.. சென்னை - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள்... எந்தெந்த ஸ்டேசனில் நிற்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் நெரிசலைக் குறைக்க சென்னை எழும்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நவம்பர் 10 நாளை வெள்ளிக்கிழமை இரவு முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி திருநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. 12ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

Chennai Tuticorin Egmore superfast Festival special fare train From 10th November 2023

தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்காக பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் நாளை தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. அதே போல தூத்துக்குடிக்கும் நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10, 12ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதேபோல் நவ.11, 13ம் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய நிறுத்தங்களில் நின்றுசெல்லும்.

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நவ.10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) சிறப்பு கட்டண ரயில் (06061) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு கட்டண ரயில், இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+