சென்னைதான் காரணம்.. இந்தியாவும் சீனாவும் ஒன்றாக இணைந்துவிட்டது.. பிரதமர் மோடி பெருமிதம்!
இந்தியாவையும் சீனாவையும் இணைத்த பெருமை சென்னையை சாரும் என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.
Recommended Video
சென்னை: இந்தியாவையும் சீனாவையும் இணைத்த பெருமை சென்னையை சாரும் என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.
சென்னைக்கு புதிய பெருமை ஒன்று கிடைத்துள்ளது என்று கூட கூறலாம். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தமிழக வருகையை அடுத்து சென்னை பற்றிய பேச்சு உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.
உலகின் இரண்டு சக்தி வாய்ந்த நாட்டின் தலைவர்கள் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டது பெரிய வரவேற்பை பெற்றது. நண்பர்கள் போல இவர்கள் அமைதியாக, அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தது பெரிய கவனம் ஈர்த்தது.

உலகம்
இவர்களின் சந்திப்பு குறித்து செய்தி உலகம் முழுக்க தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. முக்கியமாக தமிழகம் மற்றும் சீனா இடையிலான உறவு குறித்த வரலாறும் மீண்டும் எல்லோருக்கும் தெரிய தொடங்கி உள்ளது. அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இதனால் சென்னையை கூர்ந்து கவனித்து வருகிறது.

சீனாவில் எப்படி
சீனாவிலும் இதே நிலைதான். சீனா முழுக்க எல்லா ஊடகங்களும் சீன அதிபரின் தமிழக வருகை குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளது. சீன அதிபருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு குறித்து அந்நாட்டு ஊடகங்கள் பெரிய அளவில் பெருமைப்பட்டு செய்திகளை வெளியிட்டுள்ளது.

சென்னை உறவு
இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சென்னையில் இந்த ஆலோசனை நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டு நாட்டு அதிகாரிகள் இங்கு கூடியதும். அவர்கள் சென்னையின் முக்கிய பகுதிகளை பார்வையிட்டதும் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.

இணைந்தது
சீனாவும் - இந்தியாவும் ஒன்றாக இணைந்துள்ளது. இந்த இணைப்பிற்கு காரணம் சென்னைதான். சென்னை மூலம் ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகள் ஒன்றாக சேர்ந்து இருப்பது எனக்கு நிறைவை தருகிறது, இந்தியாவையும் சீனாவையும் இணைத்த பெருமை சென்னையை சாரும், என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications