ருத்ராட்சைக்கு ஆசைப்பட்டு.. பூசாரியின் உல்லாசத்தில் பெண் விழுந்து.. சென்னையில் கணவரின் ரகசிய தரிசனம்
சென்னை: சென்னையில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்றாலும், பழகிய நபர்களும், கட்டிய கணவனுமே முதுகில் குத்திய சம்பவம் நிலைகுலைய வைத்துள்ளது.. தேவி என்ற பெண் இது தொடர்பாக போலீசுக்கு சென்றுள்ளார்.. அவர் தந்த புகாரின் பேரில் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது சென்னை வடபழனியில்?
தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை தருவதாக இளம்பெண்ணை வடபழனிக்கு அழைத்து சென்று கோயில் பூசாரி உல்லாசமாக இருந்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து தனது மனைவியிடமே ரூ.10 லட்சம் கேட்டு கணவன் மிரட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேவி பக்தி
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் தேவி.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். தேவியின் வீட்டுப்பக்கத்திலேயே ஆதிபூரீஸ்வரர் கோயில் உள்ளது.. எனவே, இந்த கோயிலுக்கு தேவி அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அப்படி செல்லும்போதுதான், தேவிக்கு கோயில் பூசாரி அசோக் பாரதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பூசாரிக்கு 40 வயதாகிறது... ஒருநாள் பூசாரியிடம் தேவி, "உங்களுடன் நான் பழகுவதால், என்னுடைய குடும்பத்தில் அடிக்கடி தகராறு வருகிறது. கணவரும் என்னிடம் நெருக்கமாக இருப்பதில்லை" என்று சொன்னாராம்.
தீய சக்திகள்
இதைக்கேட்ட அசோக் பாரதி, வீட்டில் தீய சக்திகள் இருக்கிறது. அதை விரட்டினால்தான், உன்னிடம் கணவர் நெருக்கமாக இருப்பார் என்றாராம்.. உடனே தேவி, அப்படியானால், இதற்கு பரிகாரம் உள்ளதா? என்று கேட்க, ஏன் இல்லை? கோயில் பூசாரி, தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டால், எந்த தீய சக்திகள் உன்னிடம் நெருங்காது என்றாராம் பூசாரி.
உடனே தேவி, அந்த ருத்ராட்ச மாலை எனக்கு உடனே வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கோயில் பூசாரி, "வடபழனி முருகன் கோயிலில், ருத்ராட்ச மாலையை உனக்கு தருகிறேன்.. அதை அணிந்து கொண்டால், தீய சக்தி நெருங்காது" என்று சொல்லி கடந்த 6ம் தேதி தேவியை வடபழனி முருகன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.. கோயிலுக்கு வெளியே ருத்ராட்ச மாலையை வாங்கியிருக்கிறார்..
கழுத்தில் ருத்ராட்சை
ருத்ராட்சையை முருகன் முன்பு படைக்க சென்றபோது, அதற்குள் கோயில் நடை சாத்தப்பட்டுவிட்டது.. கோயில் திறக்கும்வரை, தன்னுடைய உறவினர் வீட்டில் வந்து தங்கியிருக்கலாம் எஎனறு சொல்லி தேவியை அழைத்து சென்றுள்ளார்..
தேவியை தவறாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகவே, வடபழனி பக்தவச்சலம் காலனியில், உறவினர்கள் வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து அழைத்து சென்றுள்ளார் பூசாரி.. அப்போது தேவியிடம் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி, உல்லாசமாகவும் இருந்துள்ளார் பூசாரி.
இதனிடையே, ஏற்கனவே தேவி மீது கணவருக்கு சந்தேகம் இருந்ததால், வடபழனி கோயிலுக்கு சென்ற தினத்தன்றும் சந்தேகம் வலுத்துள்ளது.. அதனால், தேவியின் கணவர், இவர்களை பின்தொடர்ந்தபடியே வந்துள்ளார்.. வடபழனியில் உறவினர் வீட்டுக்கு தேவியை அழைத்து செல்வதையும் கவனித்துள்ளார். பிறகுதான், அந்த உறவினர் வீட்டுக்கே சென்று, இவர்களை கையும் களவுமாக பிடித்துவிட்டார்.
கணவர் தந்த அதிர்ச்சி
ஆனால் அங்கேதான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.. கோயில் பூசாரியுடன் மறுபடியும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கணவரே தேவியை வற்புறுத்தியிருக்கிறார்.. அதை தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டார்.
பிறகு மனைவி தேவியிடமும், பூசாரியிடமும், உங்கள் இருவரின் ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. இதை உங்கள் வீடுகளில் உறவினர்களிடம் காட்ட போகிறேன்.. அப்படி வீடியோவை காட்ட கூடாதென்றால், எனக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்..
போலீசுக்கு போன மனைவி
இதை பூசாரியும் எதிர்பாரக்கவில்லை.. தேவியும் எதிர்பார்க்கவில்லை..ருத்ராட்சை தருவதாக சொல்லி பூசாரியிடம் ஏமாந்ததுடன், வீடியோவை காட்டி ஏமாற்றும் கணவரிடமும் பலிகடா ஆகிவிட்டதையறிந்து நிலைகுலைந்து போனார். இதற்குபிறகுதான், அசோக் பாரதி மீதும், கோயில் பூசாரியுடன் உல்லாசமாக இருக்க வைத்து அதை செல்போனில் வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் கணவர் மீதும் சென்னை கமிஷனர் ஆபீசிலேயே புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் வடபழனி மகளிர் போலீசார், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர்.. ஆரம்பத்திலிருந்தே தேவி மீது பூசாரிக்கு தவறான பார்வை இருந்து வந்துள்ளது.. எப்படியாவது அவரை தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், ருத்ராட்சை மாலை தருவதாக பொய் சொன்னதும் அம்பலமானது.
இந்த பூசாரி, பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை சுப்பிரமணி 2வது தெருவை சேர்ந்த கோயில் பூசாரியாம்.. பூசாரியுடன் சேர்த்து தேவியை மிரட்டி 10 லட்சம் பணம் கேட்ட கணவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications