ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் புக் பண்ண இப்படி மட்டும் மறந்தும் பண்ணிடாதீங்க.. சிக்கல்?
சென்னை: சென்னை வடபழனியைச் சேர்ந்தவரிடம் ஐஆர்சிடிசி இணையதளம் பெயரில் ஆன்லைனில் ₹1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐஆர்சிடிசி இணையதளம் பெயரில் அடிக்கடி மோசடிகள் நடைபெற்று வருகின்றன. ரயிலில் பல்வேறு ஊர்களுக்கு பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் மட்டுமே அதிகாரப்பூர்வ தளம் என்பதால், அதன் வழியாகவே டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள் பயணிகள். மேலும் கோடிக்கணக்கான மக்கள் தினமும் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யவும் ஐஆர்சிடிசி இணையதளத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதும், முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்யவும் முடியும். செய்ய தெரியாதளவர்களுக்கு ஆன்லைனிலேயே உதவிகளும். அப்படி பயன்படுத்தும் உதவியை வைத்து ஒரு மோசடி நடந்துள்ளது.. அதுவும் சென்னையைச் சேர்ந்தவருக்கு நடந்துள்ளது
ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ₹1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன்(51) என்பவர் தியாகராய நகர் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
பயண டிக்கெட்டை ரத்து செய்வதற்காக வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஐஆர்சிடிசி இணையதளத்தில் For Help என்று பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற எண்ணுக்கு அழைத்து அந்நபர் தனது வங்கி விவரங்களை வழங்கினாராம். அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதரன் வங்கிக் கணக்கில் இருந்து ₹1.8 லட்சம் எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் IRCTC இணையதளத்தில் பதிவிடப்பட்டு இருந்த மொபைல் நம்பர், ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்பது தெரியவந்தது. ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? அல்லது எப்படி இந்த மோசடி நடந்தது.. யாரேனும் தவறு செய்தார்களா என்பது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன: ரயிலில் தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய போகிறீர்கள் என்றால், அதிவேக இணைதள இணைப்புடன் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் முயற்சி செய்யுங்கள். தட்கலில் டிக்கெட் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன்பு இரண்டு விஷயங்களை சரியாக செய்துவிடுங்கள். அது என்ன வென்றால், யார் யார் பயணிக்க போகிறீர்களோ, அவர்களின் பெயரை காலையிலேயே எழுந்த உடன் ஐஆர்சிடிசி இணையதளத்தில் லாக் இன் செய்து add master list இல் சேர்த்துவிடுங்கள். மாஸ்டர் லிஸ்டை பொறுத்தவரை அனைவரது ஆதார் எண்ணும் வேண்டும். ஆதார் எண்ணை வைத்து சேமியுங்கள். அப்படி பெயர்களை சேர்க்கும் போது ஒருவருக்குமேல் லோயர் பர்த் போடாதீர்கள். இதை எல்லாம் சரியாக செய்து வைத்துக் கொண்டால், தட்கல் நேரத்தில் சிக்கல் வராது.
அதேபோல் ஐஆர்சிடிசி வாலட் பேமெண்ட் மோடில் டிக்கெட்டுக்கான பணத்தை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் சிக்கல் இல்லாமல் பேமெண்ட் போக ஒத்துழைக்கும். மற்ற பேமெண்ட் மோடுகள் சட்டென சிக்கலை உருவாக்கும்.. எனவே டிக்கெட் கட்டணத்த ஐஆர்சிடிசியின் பிரத்யேக வாலட் பேமெண்ட் மோடில் காலையிலேயே போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
சரி, தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரமான 11 மணியின் போது என்ன செய்ய வேண்டும்... தட்கல் முன்பதிவு ஏசி பெட்டிகளுக்கு 10 மணிக்கே ஓபன் ஆகிவிடும். ஏசிபெட்டிகளில் பயணிக்க 10மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 11மணிக்கும் முன்பதிவு செய்ய வேண்டும்.11 மணிக்கு ஓபன் செய்ய போகிறீர்கள் என்றால். 10 58க்கு லாக் இன் செய்து உள்ளே சென்றுவிடுங்கள். உள்ளே போய் எந்த பதற்றமோ, தவறுகளோ இல்லாமல் சரியாக மேற்கொள்ளுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய ஊர், கிளம்பும் ஊரை சரியாக கிளிக் செய்து, நாள் நேரத்தை கிளிக் செய்து. எந்த ரயிலோ அதற்கு பக்கத்தில் 11 மணிக்குள் போய்விடுங்கள் .
சரியாக 11 மணி ஆன உடன் கிளிக் செய் உள்ளே செல்லுங்கள். போன உடன், ஏற்கனவே நீங்கள் கிரியேட் செய்த மாஸ்டர் லிஸ்டில் உள்ள பெயர்கள் அப்படிய வந்துவிடும்.நீங்கள் ஒருலெட்டரைஅடித்தாலே அவர் பெயரை காட்டும். அப்படியே செலக்ட் செய்தால் வயது பர்த் என எல்லாமே வரும்.. இப்படியே குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தால் அவர்களின் பெயரை அடித்து செலக்ட் செய்து வைத்துவிடுங்கள்.
அதன்பிறகு புக்கிங் கன்பார்ம் என்றால் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்யட்டும் என்றமோடை கிளிக் செய்து கீழே வந்தால் கேப்சியா கேட்கும். அதனை பதற்றம் இல்லாமல் அடித்தால், உள்ளே பேமெண்ட் மோடுக்கு போகும். பேமெண்ட் மோடில் ஐஆர்சிடிசி வாலட் ஆப்சனை செலெக்ட் செய்தால் சட்டென் உள்ளே போய் எந்த சிக்கலும் இல்லாமல் பேமெண்ட் கிளிக் ஆகிவிடும். எளிதாக முன்பதிவு செய்யலாம்.
ஐஆர்சிடிசி வாலட்டிற்கு அடுத்தபடியாக பேடிஎம் பயன்படுத்தலாம்.. பேமெண்ட் எரர் இல்லை என்றால் எளிதாக பேடிஎம் இல் உள்ள போய் ஸ்கேன் பே ஆப்சனை செலெக்ட் செய்து மொபைலைவைத்து ஸ்கேன் செய்தால் டிக்கெட் புக் ஆகிவிடும். ஆனால் பொங்கல் சமயத்தில் நடந்தது என்னவென்றால் எந்த பேமெண்ட் மோடும் ஓர்க் ஆகவில்லை. மொத்தமாக ஐஆர்சிடிசி தளமே முடங்கவிட்டது.
அதேநேரம் ஐஆர்சிடிசி வாலட்டில் முயற்சித்தவர்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்ய வாய்ப்பு இருந்தது. அதுவும் சில நிமிடங்களே நடந்தது. மற்றபடிமொத்தமாக ஹேங் ஆகி 15 நிமிடம் சைட்டே தொங்கிவிட்டது. தட்கல் முன்பதிவின் போது பதற்றத்தில் மாற்றி மாற்றி கிளிக் செய்துவிடாதீர்கள் .. அப்படி ஒருமுறை தவறு செய்தால் கூட புக்கிங் பண்ண முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. சிறு தவறு கூட செய்யாமல் சரியான முறையில் முயற்சித்தால், எரர் எதுவும் டெக்னிக்கலாக தோன்றாத பட்சத்தில், புக்கிங் ஆக 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது .
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications