இத்தனை கோடியா? வேற லெவலில் மாறும் வேளச்சேரி பாலம்! பெரும்பாக்கம் மக்களுக்கும் ஸ்வீட் நியூஸ்
சென்னை: வேளச்சேரியில் 100 அடி சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை 2 கோடி செலவில் அழகுபடுத்தும் அரசு, பெரும்பாக்கத்தில் புதிய பூங்கா ஒன்றையும் அமைக்க இருக்கிறது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023 - 24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் ஆய்வுப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான சேகர்பாபு இந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு அப்பகுதியில் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல், சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும் தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. அதன் தொடர்ச்சியாக அமைச்சர் அங்கும் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு(20.5.2023) 24 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம் மீதமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள 10 திட்டங்களையும் இந்த மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபடவிருக்கின்றோம்.
அந்த வகையில், அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை, வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாக கள ஆய்வு செய்திருக்கின்றோம்.
அதேபோல, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை. பெரும்பாக்கம். சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுகின்ற சிதிலமடைந்த பள்ளிக்கூடங்களை புதுப்பித்தல், பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல், சலவைக் கூடங்களை மறுவளர்ச்சி மேம்படுத்துதல், காசிமேடு கடற்கரையோரம் 5 கிலோ மீட்டர் அளவிற்கு அந்த இடத்தை அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இந்த அறிவிப்புகளை முதலமைச்சர் அவர்கள் சீரிய ஆலோசனையின் பேரில் வடிவமைத்த இந்தத் திட்டங்கள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல், திட்டங்களைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கிறது.
மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்ற வகையிலே இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த களஆய்வு நிச்சயம் ஒரு பயனுள்ளதாக அமையும்.
இந்த பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அனைவருடைய உடல் நலத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், அதே நேரத்தில் விளையாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலும், பெரும்பாக்கத்தில் விரைவில் பூங்கா மற்றும் தெரிவித்துக்கொள்கிறேன். விளையாட்டுத்திடல் ஏற்படுத்தித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியோடு மேற்கண்ட அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications