ஆபாச படம் எடுத்து நாசம் செய்ய துணிந்த குணசீலன்.. மறுத்து உயிரை விட்ட 13 வயது சிறுமி.. ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக பக்கத்து வீட்டு இளைஞர் ஆபாச படம் எடுத்து மிரட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்தே சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் குணசீலன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் வசித்து வருபவர் நாகராஜ். இவர் பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது 13 வயது மகள், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஜூன் 14ம் தேதி இந்த சிறுமி வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தார். சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்த போலீசார், அத்துடன் சிறுமி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர் அதில், ஒரு எஸ்எம்எஸ் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

வீட்டை காலி செய்தார்

வீட்டை காலி செய்தார்

இதையடுத்து அந்த எஸ்எம்எஸ் யாருடைய செல்போனில் இருந்து வந்தது என போலீசார் ஆய்வு செய்தார்கள். அதில் நாகராஜ் வீட்டில் குடியிருந்த குணசீலன் (33) செல்போனில் இருந்து அந்த எஸ்எம்எஸ் வந்திருப்பது தெரியவந்தது. சிறுமி இறந்த சில நாட்களிலேயே வீட்டை காலி செய்துவிட்டு, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதிக்கு அவர் சென்றது தெரிந்தது.

கண்டுபிடித்த போலீஸ்

கண்டுபிடித்த போலீஸ்

இதற்கிடையே குணசீலனின் வீட்டிற்கு சென்றபோது, அவர் தலைமறைவாகி இருந்தார். அங்கிருந்து அவர் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பல தகவல்கள், வீடியோ படங்கள் அழிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. சைபர் கிரைம் உதவியுடன் அழிக்கப்பட்ட படம், வீடியோக்களை போலீசார் மீட்டனர். அதில், இறந்த சிறுமியின் ஆபாச படங்கள் மற்றும் குணசீலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோக்கள் இருந்தன.

மணப்பாறையில் கைது

மணப்பாறையில் கைது

இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் , மணப்பாறை பகுதியில் பதுங்கியிருந்த குணசீலனை நேற்று முன்தினம் கைது செய்து, தரமணி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தார்கள்.. அப்போது, அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

தனியாக இருப்பேன்

தனியாக இருப்பேன்

குணசீலன் கூறுகையில், சிறுமியின் வீட்டில் வாடகை இருந்தபோது, அவளின் பெற்றோருடன் அன்பாக பழகினேன்.. அவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால், சிறுமியை தினசரி டியூஷன் அழைத்து சென்று வரும்படி என்னிடம் கூறினார்க்ள். பெற்றோர் வேலையில் இருந்து வரும் வரை, சிறுமியுடன் வீட்டில் இருந்தேன்.

சிறுமி தற்கொலை

சிறுமி தற்கொலை

அப்போது, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அதை செல்போனில் பதிவு செய்தேன்.. பின்னர், அதை காண்பித்து சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்தேன். அதற்கு சிறுமி ஒத்துக்கொள்ளவில்லை. அந்த ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டினேன்.. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதையடுத்து, எதுவும் தெரியாததுபோல், சில நாட்களில் நான் அந்த வீட்டை காலி செய்து வந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்.. குணசீலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+