Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்புட்றா.. சென்னை வில்லிவாக்கம் ஏரியா இது! சூப்பராகிடுச்சு,ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அசத்தல் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி எதற்கும் பயன்படாதநிலையில் இருந்தது. இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரியில் ஏராளமான பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளது. வேறலெவலில் மாறிய ஏரியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சியில் பகுதியில் 206 குளம் மற்றும் ஏரிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 32 குளங்கள் மற்றும் ஏரிகள், சென்னை ஸ்மார்ட்சிட்டி நிதியிலிருந்து புனரமைப்பு பணிகள் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. அதை தொடர்ந்து

Chennai Villivakkam lake has become super; Radhakrishnan IAS amazing announcement

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் - சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி ரூ.16 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது.

வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய நீர்நிலையாகும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்துக்கு சொந்தமானது. ஆனால் குடிநீருக்கு பயன்படுவது இல்லை. இந்த ஏரியை முறையாக புனரமைத்தால் வில்லிவாக்கம் பகுதியில் ஒரு பிரதான நீர் நிலையாக மாறும் என்றும் இதன் மூலம் வில்லிவாக்கம் பகுதி நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்று எதிர்பார்ப்பதாக அன்று சென்னை மாநகராட்சி கூறியிருந்தது.

Chennai Villivakkam lake has become super; Radhakrishnan IAS amazing announcement

இந்த ஏரிகொள்ளளவை 20 ஆயிரம் கனமீட்டரில் இருந்து 70 ஆயிரம் கனமீட்டராக அதிகரிக்கவும், ஏரிக்கு கரைகள் அமைப்பது, டிவிஎஸ் கால்வாயை ஒட்டி ஒரு சாலை அமைப்பது, குழந்தைகள் பூங்கா, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி மையம், நடை பயிற்சி பாதை, ஆவின் விற்பனை நிலையம், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், வேலி, திறந்தவெளி திரையரங்குகள் ஆகியவற்றை அமைப்பது, இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், மின்கழிப்பறை வசதி, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், குப்பைத் தொட்டிகள் அமைத்தல், ஏரிக் கரையை பாதுகாக்க நவீன முறைகளை பின்பற்றுதல் போன்ற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மாநகராட்சி கடந்த 2019ம் ஆண்டு அறிவித்தது.

அதன்படியே பல்வேறு பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை வில்லிவாக்கம் ஏரியில் நடந்து வந்தது. வில்லிவாக்கம் ஏரியின் நடுவில் நடந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரி தூர்வாரப்பட்டு நீர் நிறைந்து காணப்படுகிறத. ஏரியில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சீரமைப்பு பணிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழு விவரத்தை சென்னை மாநகராட்சி இன்னமும் வெளியிடவில்லை.

Chennai Villivakkam lake has become super; Radhakrishnan IAS amazing announcement

இந்நிலையில் வில்லிவாக்கம் ஏரியை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஏரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் நடந்தார். மேலும் ஏரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கரைகள், பாதைகள், நீர் வழித்தடங்கள் போன்றவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், " வில்லிவாக்கம் குளம் புணரமைப்பு பணிக்கு பின் அதன் கொள்ளளவு 300MLD ஆக உயர்ந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த வில்லிவாக்கம் ஏரி, இன்னும் அதிக நீரை சேமிக்கும் வகையில் மாற்றப்படும், மேலும் பொதுமக்கள் வந்து மகிழும் வகையில் ஏராளமான வசதிகள் அமைக்கப்படும்" என்று கூறியுள்ளது. மேலும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த படங்கள் சென்னை மாநகராட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+