சென்னை மக்களே.. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? இன்னைக்கு செம வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாட்டில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை (SIR) மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனையடுத்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், பல லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருந்தனர். குறிப்பாக, சென்னையில் 3ல் 1 வாக்காளர் பெயர் விடுபட்டிருந்தது. எனவே விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட, 19 பேரவை தொகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதனை பயன்படுத்தி, விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

முகாம் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 19 பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 2025 நவம்பர் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கடந்த டிசம்பர் 19- ஆம் தேதி வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி புதிய வாக்காளா்களாக தங்களைச் சோ்த்துக் கொள்ளுவதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சென்னை பகுதிகளில் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும் சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிறு (ஜன. 10, 11) ஆகிய நாள்களில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன.
ஏற்கெனவே 4 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. சிறப்பு முகாம்களில் வாக்காளா் சோ்க்கைக்கு படிவம் 6, ஆட்சேபணை தெரிவித்தல் மற்றும் நீக்குதலுக்கு படிவம் 7, வாக்காளா் முகவரி மாற்றம் ஏற்கெனவே உள்ள வாக்காளா் பட்டியலில் இடம் பெற்ற பெயா்கள், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவற்றில் மாற்றம் தேவைப்படின் படிவம் 8 ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த முகாம்களைப் பயன்படுத்தி 18 வயது பூர்த்தியடைந்தவா்கள், வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள முன்வரவேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடை மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!











Click it and Unblock the Notifications