சென்னை 7 மண்டலங்களில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்! எங்கெங்கு தெரியுமா?
சென்னை: சென்னையில் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3 நாட்கள் வரை பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2000 மி.மீ விட்டமுடைய 2வது வரிசை பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 2000 மி.மீ குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 30.07.2025 அன்று காலை 08.00 மணி முதல் 01.08.2025 இரவு 10.00 மணி வரை மண்டலங்கள் -7 (அம்பத்தூர்), 8 - (அண்ணா நகர்), 9 - (தேனாம்பேட்டை), 10 - (கோடம்பாக்கம்), 11 - (வளசரவாக்கம்). 12 -(ஆலந்தூர்), 13 -(அடையாறு) மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை அவசரத் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சேமித்து தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications