சிலர் “ட்விஸ்ட்” பண்ணி விடுறாங்க.. சென்னைக்கு நிச்சயம் நிரந்தர தீர்வு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: "சென்னையில் கடந்த 3 மாதங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில் கை கொடுத்திருக்கிறது. மழைநீர் தேங்குவதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்." என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை கனமழை வெளுத்து வாங்கியது. பின்னர் படிப்படியாக மழை குறைந்து தற்போது ஓய்ந்துள்ளது.

மழைநீர் தேங்கியது: கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைக்கு மத்தியிலேயே, மழைநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்துவிட்டது. ஒருசில இடங்களில் மட்டுமே தற்போது மழைநீர் தேங்கியுள்ள சூழலில் அங்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு: இன்று சென்னை பள்ளிக்கரணையின் நாராயணபுரம் ஏரியில் மழைநீர் அளவு குறித்து, நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளும், ஜேசிபி மூலம் வண்டல் மண் கழிவுகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் அதனை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
ஸ்டாலின் பேட்டி: அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "சில பேர் இன்னும் 'ட்விஸ்ட்' பண்ணி சொல்லிட்டு இருக்காங்க. நாங்கள் செய்துள்ளதை நீங்களே மக்களிடம் சென்று கேளுங்கள். சென்னையில் கடந்த 3 மாதங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில் கை கொடுத்திருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததுமே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைத்து ஆய்வு செய்து சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் 20 % பணிகள் பாக்கி இருக்கிறது. அதனையும் கூடிய சீக்கிரம் முடித்து விடுவோம்.
நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்: மழைநீர் தேங்குவதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும். தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் இந்த பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் சென்னை மாநகர மக்கள் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications