சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை.. தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. சென்னை வானிலை மையம்
Recommended Video
சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.
இதையடுத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

கனமழை
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும்.

48 மணி நேரத்திற்கு
எனவே குமரி கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்யும்.

மக்கள்
ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் 8 செ.மீ.ருக்கு மேல் மழை பெய்யும். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தவித பாதிப்பு
இந்திய பெருங்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது வடக்கு நோக்கி நகரும். எனவே தமிழகத்திற்கு இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றார் புவியரசன்.

48 மணி நேரத்திற்கு
எனவே குமரி கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்யும். கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications