பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா? ராயப்பேட்டை மருமகளின் வில்லத்தனம்! போலீஸ் விசாரணையில் பெரிய ட்விஸ்ட்!
சென்னை: பெண்கள் குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் சில நேரங்களில் அது தவறாக பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விஷயம். அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்திருக்கிறது. மாமனாரை பழிவாங்க தனது சொந்த மகளை வைத்து பொய் பாலியல் புகார் அளித்த மருமகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
வெளியிடங்கள் மட்டுமல்லாது, சொந்த குடும்பத்தினரை சிறுமிகளிடம் அத்துமீறுவது கவலைக்குரிய விஷயம். நெருங்கிய உறவினர்கள் என்று இல்லாமல் தந்தை, சகோதரன், தாத்தா உள்ளிட்டோரே சிறுமிகளிடம் அத்துமீறிய பல சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது.

போக்சோ சட்டம்
அதனை தடுக்கும் நோக்கில் தான் போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை அடுத்து ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக அவற்றில் விசாரணையும் நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் எந்த வித விசாரணையும் இன்றி உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுவதால் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் புகார்கள் உள்ளது. சமீபத்தில் வெளியான இயக்குநர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் கூட மாமனார் மீது மருமகள் பொய்யாக போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்தது போன்ற காட்சி வைக்கப்பட்டிருக்கும்.
சென்னை பொய்யான வழக்கு
உண்மையில் சென்னையில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் தனது மகளை தனது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணின் மாமனாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அ தில் தன் மீது குற்றமே இல்லை என அவர் மறுத்ததோடு வேண்டுமானால் தனது பேத்தியிடும் விசாரணை நடத்துங்கள் எனக் கூறியிருக்கிறார்.
பழிவாங்கும் புகார்
இதை அடுத்து அந்த சிறுமியிடம் போலீசார் தனியே விசாரணை நடத்தினர். அதில் தனது தாத்தா தன்னிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை எனவும், தனது தாய்தான் பொய்யான புகார் அளித்துள்ளதாக கூறி அதிர வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் நடத்தி விசாரணையில் தனது மாமனாரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக பொய்யான புகார் அளித்தது தெரிய வந்திருக்கிறது.
போலீஸ் விசாரணை
சென்னையில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த அந்த நபர், வீடு உள்ளிட்டவற்றை வாடகைக்கு விட்டு இருக்கிறார். இதனால் மாதம் 60 ஆயிரம் வருமானமும் வந்திருக்கிறது. இதனால் அவரது எம்இ பட்டதாரி மகன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இதை அடுத்து மகனை திட்டியதாக கூறப்படுகிறது. தனது கணவரை திட்டியதால் ஆத்திரம் அடைந்த அந்த இளம் பெண் மாமனாரை சிறைக்கு அனுப்பி விட்டு கணவருடன் வீட்டில் இருக்கலாம் என்று நினைத்து தனது மகளை வைத்து பொய் புகார் அளித்தது தெரிய வந்தது.
எஃப்ஐஆர்
இதனையடுத்து முதியவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு பொய் புகார் அளித்த பெண் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர் போலீசார். இந்த சம்பவம் பலத்த அதிர்வலைளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் பொய் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில் இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கு முன்னதாக உரிய விசாரணை நடத்தி அதற்கு பின்னே எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications