Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஞ்சள் தாலி கட்டியதுமே.. மனைவியை காணோம்! கடைசியில சென்னை மாப்ள தலையில் மணப்பெண் அர்ச்சனா இறக்கிய இடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடைசி நேரத்தில் தாலி கட்டும் நேரத்தில், சில மணமகன், மணமகள் செய்யும் செயல்களால், பெற்றோர்கள் தலைகுனியும் நிலைமை ஏற்படுகிறது.. சிலசமயங்களில் திடீர் திருமணங்கள் நடந்துவிட்டாலும், பாதிக்கப்படுவது இரு தரப்பு பெற்றோர்களாகவே இருப்பது வேதனையான விஷயம்.. அந்தவகையில், நேற்றைய தினம் சென்னையில் நடந்த திருமணத்தில் பரபரப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா? யாரிந்த அர்ச்சனா?

சமீபத்தில் சேலம் பச்சப்பட்டி கிராமத்தில் ஒரு திருமண வைபவம் நடந்தது.. சந்தோஷ் குமார் என்பவர் கோவையில் தனியார் கம்பெனியில வேலை பார்த்து வருபவர்.. இவருக்கு இளம்பெண் ஒருவரை பெண் பார்த்து பேசி, நிச்சயமும் செய்துள்ளனர். திருமண நாளன்று, தாலி கட்டும் நேரத்தில் திடீரென மணப்பெண்ணை காணவில்லை.

Chennai archana wedding

அப்போதுதான், மணப்பெண், ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததும், பெற்றோருக்கு பயந்து இந்த திருமணத்துக்கு சம்மதம் சொன்னதும் தெரியவந்தது.. இதனால் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டினர் காலில் விழுந்து கதறி அழுது, தங்களது இன்னொரு மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சி கதறினார்கள்.

இதற்கு மாப்பிள்ளையும், ஓடிப்போன பெண்ணின் தங்கையும் சம்மதம் சொல்லியதையடுத்து, திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்துவிட்டது..

ஆதார் கார்டு

பிறகு மணமக்கள் தங்கள் வாழ்க்கையை இனிதே தொடங்கினார்கள்.. சில நாட்கள் கழித்து, முறைப்படி திருமணத்தை பதிவு செய்ய, ஆதார் கார்டு வேண்டும் என்று, பெண்ணின் பெற்றோரிடம் மணமகன் கேட்டிருக்கிறார்.. அப்போதுதான், தான் திருமணம் செய்துள்ள பெண்ணுக்கு 18 வயதுகூட நிரம்பவில்லை என்பது தெரிந்து மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கேட்டதற்கு, பெண் வீட்டினரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.. பிறகு இரு தரப்பினருக்கும் தகராறு வந்து, இரு தரப்பினருமே போலீஸுக்கு சென்று புகார் தந்தார்கள்.. அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. ஆனால், இந்த திருமணம் சேலத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பியூட்டி பார்லர்

இந்நிலையில், சென்னையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த தம்பதி அகிலன், நாகவள்ளி.. இவர்களது 20 வயது மகள் அர்ச்சனாவுக்கும், மாதவரம் விஜயகுமார் என்பவருக்கும் நேற்று பெசன்ட் நகர் தேவாலயத்தில் 2 வீட்டார் முன்னிலையில் திருமணம் சிறப்பாக நடந்தது,

திருமணம் முடிந்ததுமே மணமக்களை, பெண் வீட்டிற்கு அழைத்து வந்தனர். மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி கொண்டிருந்தன.. மாலையில் ரிசப்ஷன் என்பதால், மதியம் பியூட்டி பார்லருக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றிருக்கிறார் மணமகள்.. ஆனால், சாயங்காலம் வரை அர்ச்சனா வீட்டுக்கு வரவில்லை..

அர்ச்சனா எங்கே

இதனால் பதறிப்போன பெற்றோர் எங்கெங்கோ தேடினார்கள்.. அர்ச்சனாவை காணவில்லை.. பிறகு தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்தபோதுதான் அர்ச்சனா ஏற்கனவே எருக்கஞ்சேரியை சேர்ந்த கலையரசன் என்பவரை காதலித்து வந்ததும், தற்போது அவருடனேயே சென்றுவிட்டதும் தெரியவந்தது..

இதையடுத்து, தங்களது மகளை எப்படியாவது மீட்டு தருமாறு, அர்ச்சனாவின் அம்மா நாகவள்ளி, திருவிக நகர் போலீசில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்ச்சனாவை தேடி கொண்டிருக்கிறார்கள்.. காலையில் திருமணம் நடந்து, மாலையில் மணப்பெண்ணை இல்லாத அதிர்ச்சியில் நொந்து போயுள்ளார் மணமகன்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+