Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின் மீட்டரில் தவறான கணக்கீடு.. சென்னை பெண் செய்த தரமான சம்பவம்! அடுத்து நடந்ததுதான் ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வசித்து வரும் ருக்மணி என்ற பெண்ணின் வீட்டில் மின் மீட்டரில் கூடுதல் கட்டணம் காட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் புகார் அளித்த நிலையில் மின் மீட்டர் தவறான கணக்கீடு காட்டியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க மின்சார வாரியத்துக்கு நுகர்வோர் குறைதீர் மையம் அதிரடி உத்தரவிட்டது.

தமிழகத்தின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணியை மின்சார வாரியம் மேற்கொள்கிறது. மின் பயன்பாட்டை கணக்கிட்டு அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாதத்திற்கு இருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படும் முறை தற்போது அமலில் உள்ளது. வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டரில் பதிவாகும் ரீடிங்கை வைத்து, மின்சார வாரிய ஊழியர்கள் மின் கட்டணத்தை கணக்கிடுகிறார்கள்.

Chennai electricity meter consumer court

ரூ.30 ஆயிரம் இழப்பீடு பெற்ற பெண்

மின் கட்டணம் தொடர்பாக நுகர்வோர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தகவல் அனுப்பப்படுகிறது. ஆன்லைனில் இருந்தே மின் கட்டணத்தை நுகர்வோர்கள் செலுத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஒரு சில இடங்களில் மின் கணக்கீட்டில் தவறு நடைபெற்று இருப்பதாக நுகர்வோர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் கடந்த 2023 ஆம் கிட்டதட்ட இப்படியான ஒரு நிகழ்வுதான் நடைபெற்றுள்ளது.

மின் கணக்கீட்டில் குளறுபடி நடைபெற்று இருப்பதை அந்த பெண் நிரூபித்து உள்ளார். இதையடுத்து அந்த பெண் ரூ.30 ஆயிரம் இழப்பீடு பெற்றுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:

மின் கணக்கீட்டில் கூடுதல் கட்டணம்

சென்னையை சேர்ந்தவர் ருக்மணி. கடந்த 2023-ஆம் ஆண்டு இவரது வீட்டிற்கு வழக்கத்தை விட மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மின்கட்டணம் வழக்கமாக இவ்வளவு வராது.. ஆனால் இந்த முறை அதிகமாக வந்துள்ளது என உதவி மின் பொறியாளரிடம் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அவரது மின் கணக்கீட்டை சரிபார்த்த மின்வாரிய அதிகாரிகள் அதை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதில், மின்சார மீட்டர் நல்ல நிலையில் இருப்பதாகவும் கணக்கீட்டில் எந்த குளறுபடியோ, தவறோ இல்லை என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு அடுத்த இரண்டு முறையும் மின் கணக்கீட்டில் கூடுதல் கட்டணமே வந்துள்ளது. இதனால், நிச்சயம் மின் மீட்டரில் ஏதோ குறைபாடு இருக்கிறது என நம்பிய ருக்மணி, நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தை நாடினார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் உள்ள மின் மீட்டர் ஆய்வகத்திற்கு அனுப்பி மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. இதில், மின் மீட்டரில் எந்த கோளாறும் இல்லை என சான்றளிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் குறை தீர் மையம் அதிரடி உத்தரவு

இதனால், அதிர்ச்சி அடைந்த பெண், என்ன செய்வது என்று திணறியுள்ளார். பின்னர், வீட்டில் மின் கசிவு எதுவும் இருக்கிறதா? என மின் பகிர்மான கழக அதிகாரிகள் சோதித்து பார்க்க சொல்லியிருக்கிறார்கள். இதன்படி, வீட்டில் உள்ள மின் வயர்கள், இணைப்பு அனைத்தையும் சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். தொடர்ந்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி, கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு, மின் மீட்டரை ருக்மணி அனுப்பியுள்ளார்.

அங்கு நடந்த பரிசோதனையில், மின் மீட்டரில் கோளாறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 3 முறை பரிசோதனை செய்த கால கட்டத்திற்குள் அவர் மின் கட்டணமாக ரூ.30 ஆயிரம் செலுத்தியுள்ளார். இதற்கு இடையே, மின் மீட்டரில் கோளாறு இருப்பதை அடுத்து, மின்வாரியம் வேறு மீட்டரை பொருத்தியுள்ளது. ஆனால் கூடுதல் கட்டணம் பற்றி எந்த ஒரு பதிலும் இன்றி மவுனம் காத்திருக்கிறது.

இதையடுத்து, தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தை ருக்மணி நாடியுள்ளார். இதனை விசாரித்த குறைதீர்ப்பு ஆணையம், ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டு கால போராட்டத்திற்கு பிறகு ருக்மணி இழப்பீட்டை பெற்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+