Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்.. மணப்பெண் எடுத்த துணிச்சல் முடிவு.. ஆரணியே ஆடிப்போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காதலித்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த காதலனை கையும் களவுமாக காதலி பிடித்துள்ளார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கே சென்று மணமகளிடம் நடந்த விஷயத்தை கூறியதும் மணமகள், திருமணத்தை நிறுத்திவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காதலனின் திருமணத்தை சென்னையை சேர்ந்த இளம்பெண் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து, தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என துணிச்சலாக முடிவு எடுத்து மண்டபத்தை விட்டு வெளியேறினார். இது குறித்த விவரம் வருமாறு:-

arani love marriage

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்தவர் சாம்ராஜ். 29 வயதான சாம்ராஜ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சாம்ராஜ்க்கும் தன்னுடன் வேலை பார்க்கும் சென்னை முகப்பேர் (மேற்கு) பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். தனது காதலியை ஆசைவலையில் வீழ்த்திய சாம்ராஜ், திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, சாம்ராஜுக்கு திருமணம் முடித்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி, ஆரணியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சாம்ராஜ்ஜுக்கும் திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். கடந்த 4 ஆம் தேதி திருமண வரவேற்பு நடந்த நிலையில், நேற்று முன் தினம் காலை திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே, சாம்ராஜுக்கு திருமணம் நடைபெற இருக்கும் தகவல், அவரது காதலியான சென்னையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கிடைத்தது.

இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சென்னை பெண், ஆரணிக்கு புறப்பட்டு சென்றார். தனது காதலன் சாமராஜ்ஜிடம் ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்.. என்னை காதலித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பது நியாயமா? என கேட்டுள்ளார். ஆனால், தன்னை விட வயது அதிகம் என்பதால் உன்னை திருமணம் செய்ய எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று சாம்ராஜ் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, சாம்ராஜ்ஜின் பெற்றோர் அந்த பெண்ணிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி இரவு மணமக்கள் அழைப்பு நடந்தது. ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணமக்கள் அழைப்பு நிகழ்ச்சியும், திருமண வரவேற்பும் தடபுடலாக நடந்தது. திருமணத்திற்கு இரு வீட்டினரும் உறவினர்களும் குவிந்து இருந்தனர்.

திருமண வீடு விழாக்கோலம் பூண்டிருந்த போது, சென்னையை சேர்ந்த மணமகனின் காதலி, தனது வழக்கறிஞர்களுடன் திடீரென திருமண மண்டபத்துக்கு வந்தார். அங்கே மணமேடையில் இருந்த மணமகளிடம், சாம்ராஜ் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு, உன்னை திருமணம் செய்வதாகவும், திருமணத்தை நிறுத்த தாங்கள் வந்துள்ளதாகவும் கூறினார். இதை கேட்டதும் மணமகள் வீட்டார் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.

மணமகள் இந்த திருமணமே எனக்கு வேண்டாம் என பெற்றோரிடம் கூறிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறி ஆட்டோவில் வீட்டுக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+