அருணாவுக்கு பணத்துமேல அவ்வளவு ஆசை.. அழகு + இனிமையான குரலால் வசீகரித்து ரூ.25 லட்சம் மோசடி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அருணாவுக்கு பணத்துமேல அவ்வளவு ஆசை..வீடியோ

    சென்னை: அருணாவுக்கு பணத்துமேல அவ்வளவு ஆசை.. அதான் இப்படி தில்லாலங்கடி வேலை பார்த்து, கடைசியில் போலீசிடம் வசமாக சிக்கி உள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இதன் ஓனர் பெயர் ரூபன் சக்கரவர்த்தி. இதன் நிறுவன அதிகாரியாக வேலை பார்ப்பவர் அருணா என்ற இளம் பெண். ரூபனுக்கு வயசு 26, அருணாவுக்கு வயசு 25 ஆகிறது!

    போன மார்ச் மாதம்தான் இந்த நிறுவனத்தை இவர்கள் ஆரம்பித்தனர். சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் படித்த இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை வாங்கித்தரப்படும் என்று ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது.

    பாஸ்போர்ட்

    பாஸ்போர்ட்

    இதை பார்த்ததும், ஏராளமான இளைஞர்கள் வேலை கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் பணம் வசூலிக்கப்பட்டது. அந்த இளைஞர்களின் பாஸ்போர்ட்டையும் நிறுவனம் வாங்கி வைத்து கொண்டது. இதற்கு ஒரு போலி நகலையும் அந்த நிறுவனம் இளைஞர்களுக்கு தந்துள்ளது.

    80 பேர்

    80 பேர்

    அவ்வளவுதான்... அதோட அந்த நிறுவனம் இழுத்து மூடியாகிவிட்டது. 2 பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இதுவரைக்கும் வேலைக்கு விண்ணப்பித்த இளைஞர்களிடம் ரூ.25 லட்சம் + பாஸ்போட்டை வாங்கி கொண்டு எஸ். ஆகியிருந்தனர். போன் வரும் என்று காத்திருந்த இளைஞர்களுக்கு ஒரு போனும் வரவில்லை. நம்பி மோசம் மோன இளைஞர்கள் 80 பேர் சென்னை ஆயிரம்விளக்கு போலீசாரிடம் புகார் தரவும் விசாரணை ஆரம்பமானது.

    இனிமையான குரல்

    இனிமையான குரல்

    இதையடுத்து ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அருணாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஓனர், நிரூபன் சக்ரவர்த்தி இன்னும் தலைமறைவாகவே உள்ளதால் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நல்ல அழகு.. இனிமையான குரல்.. இதுதான் அருணாவின் மூலதனம்!

    ரூ.25 லட்சம்

    ரூ.25 லட்சம்

    "மலேசியா ஆபீசில் இருந்து பேசுறோம்.. எங்கள் கம்பெனியில் உங்களை செல்க்ட் செய்துவிட்டோம். கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை, சம்பளம் வழங்கப்படும், உங்களுக்கு இந்த வேலை வேண்டும் என்றால், நுங்கம்பாக்கத்தில் உள்ள எங்கள் ஆபீசில் 50 ஆயிரம் பணம் செலுத்தி உறுதிச் சான்றிதழ்களை வாங்கி கொள்ளுங்கள்" என்று இனிமையாக பேசி பேசி 25 லட்சத்தை கறந்தது அருணாதானாம்!

    வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி 80 பேரிடம், ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+