மூன்று நாட்களாக காதலி பேசவில்லை.. போனது காதலனின் உயிர்.. சென்னையில் பெரும் சோகம்
சென்னை: சென்னையில் விஜய் மணிகண்டன் என்பவர் தனது காதலி 3 நாள் பேசாத காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதலி பேசாவிட்டால் தூக்கத்தில் சிலர் அவ்வப்போது விபரீதமான முடிவுகளை எடுக்கிறார்கள். காதலி இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று சினிமா பாணியில் சிலர் தற்கொலை வரை செல்கிறார்கள்.
அப்படித்தான் சென்னை வியாசர்பாடியில் விஜய் மணிகண்டன் என்பவர் தன் காதலி தன்னிடம் 3 நாள் பேசாத காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தன்னுடன் பழகிய பெண்ணின் ஆபாச வீடியோக்களை.. சென்னை இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!

விஜய் மணிகண்டன்
சென்னை வியாசர்பாடி முதல் தெருவை சேர்ந்தவர் குருநாதன் இவருக்கு திருமணமாகி 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இவர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்து வருகிறார் இதில் மூத்த மகன் விஜய் மணிகண்டன் வயது 20 என்ற நபர் சென்னை ஐசிஎப்பில் கூலி வேலை செய்து வருகிறார்,

காதலி பேசவில்லை
இவர் ஆந்திராவில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது அந்தப் பெண் கடந்த மூன்று நாட்களாக விஜய் மணிகண்டனிடம் பேசவில்லை என மனவருத்தத்தில் வேலைக்கு செல்லாமல் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் முதல் தளத்தில் புடவையால் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் நீண்ட நேரம் கழித்து விஜய் மணிகண்டனின் உறவினர்கள் மேலே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடல் மீட்பு
உடனடியாக இதுகுறித்து சென்னை எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜய் மணிகண்டனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.