ஓசி "ஃப்ரைடு ரைஸ்" தரமாட்டியா? கொதிக்கும் எண்ணெயை அப்படியே எடுத்து.. அலறிய உரிமையாளர்.. பகீர்
சென்னை: ஓசியில் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் தராததால் ஆத்திரமடைந்த புள்ளிங்கோ இளைஞர்கள், ஓட்டல் உரிமையாளர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டதால் ஓட்டல் உரிமையாளரும், அவரது மகனும் உடல் வெந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் தொடர்ந்து கஞ்சா போதையில் அராஜகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

அதிகரிக்கும் "கஞ்சா குற்றங்கள்"
தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, கொலை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் சம்பங்களும் அதிகரித்து வருகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலினே தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும், இதனை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் எனக் கூறும் அளவுக்கு கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது. இவ்வாறு கஞ்சா போதையில் இளைஞர்கள் செய்த வெறிச்செயல் சென்னையில் நடந்துள்ளது.

ஓசி ஃப்ரைடு ரைஸ்
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் மாடம்பாக்கத்தில் உள்ள சுபசகத்தி நகரில் ஓட்டல் நடத்தி வருபவர் ஜெயமணி (64). இவரது மகன் மணிகண்டனும் இந்த ஓட்டலை கவனித்து வருகிறார். இதனிடையே, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தினமும் கஞ்சா அடித்துவிட்டு, இவர்கள் ஓட்டலில் ஓசியில் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்து வந்தனர்.

"லோக்கல் பசங்களுக்கே ரைஸ் கிடையாதா?"
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அந்த கஞ்சா கும்பலைச் சேர்ந்த 2 பேர் அங்கு வந்து வழக்கம் போல ஓசியில் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் கேட்டுள்ளனர். ஆனால், உரிமையாளர் ஜெயமணி, பணம் கொடுத்தால் தான் இனி சாப்பாடு கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த புள்ளிங்கோ இளைஞர்கள், "லோக்கல் பசங்களுக்கே ரைஸ் தர மாட்டியா.." எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இவர்களின் கூச்சலுக்கு ஓட்டல் உரிமையாளர் ஜெயமணி பயப்படவில்லை.

கொதிக்கும் எண்ணெயை..
எவ்வளவு கூச்சல் போட்டும் ஃப்ரைடு ரைஸ் கிடைக்காததால் அவமானம் அடைந்த அந்த இரண்டு இளைஞர்களும் அங்கிருந்து சென்றனர். பின்னர் இரவு 11 மணியளவில் அவர்களுடன் சேர்த்து மொத்தம் 6 புள்ளிங்கோஸ் இளைஞர்கள் கஞ்சா போதையில் ஜெயமணியின் கடைக்கு வந்துள்ளனர். அப்போது, "இந்த ஏரியா காரன்களுக்கே நீ சாப்பாடு கொடுக்க மாட்டியா எனக் கூறி, அங்கிருந்த கொதிக்கும் எண்ணெய் சட்டியை எடுத்து ஒரு இளைஞர், ஓட்டல் உரிமையாளர் மீது ஊற்றினார். இதில் ஜெயமணி, அவரது மகன் மணிகண்டன் ஆகியோரின் உடலில் கொதிக்கும் எண்ணெய் பட்டு அவர்கள் அலறி துடித்தனர். ஆனாலும் விடாத அந்த கஞ்சா போதை இளைஞர்கள், அங்கிருந்த ஊழியர்களை தாக்கினர். மேலும், கத்தியால் ஒரு ஊழியரின் கையிலும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து புகாரின் பேரில் சேலையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (23), சிவா (24), ஜாங்கோ (21), கார்த்திக், டியோ விக்கி (22) ஆகியோரை கைது செய்தனர்.
-
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
தவெக தந்த புகார்.. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பின்னணி -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி.. விஜய்யின் பெரம்பூர் தொகுதி தான் டாப்! கொளத்தில் எவ்வளவு பேர்? -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை












Click it and Unblock the Notifications