சென்னையில் உயரும் நிலத்தடி நீர்மட்டம்! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு.. இது நல்லா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் குடிநீர் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஏறத்தாழ எல்லா வீடுகளிலும் இப்போது ஆழ்துளை கிணறுகளை அமைக்க தொடங்கிவிட்டார்கள். இதனாலும், தொழிற்சாலைகள் அளவில்லாமல் நீரை பயன்படுத்துவதாலும் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருக்கிறது. இதனை சமாளிக்க தற்போது தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

அதாவது கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலப்பரப்பை நீர்ப்பரப்பாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இப்படி செய்வதன் மூலம் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும், தென் சென்னையின் நிலத்தடி நீரை மேம்படுத்தவும் முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

waterbody Tamil Nadu

தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் தலைமையில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் டி. சண்முகநாதன் இது குறித்து பேசுகையில், இந்த நிலப்பரப்பை எவ்வாறு ஒரு முழுமையான நீராதாரமாக மாற்றலாம் என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளுமாறு நீர்வளத் துறைக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

சுருங்கிய வேளச்சேரி ஏரியின் மேல் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலம், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளின் மையமாக இருந்துள்ளது. மழைநீர் சேகரிப்பை மேம்படுத்த, மாநகராட்சி ஏற்கனவே இந்த இடத்தில் நான்கு குளங்களை அமைத்துள்ளது. இவற்றின் மொத்த சேமிப்புத் திறன் 4.7 மில்லியன் கன அடி ஆகும். ஒரு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, இந்த சொத்து நிலையை அப்படியே பராமரிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு அமர்வு தமிழக அரசிடம் கோரியுள்ளது. இந்த சூழ்நிலையில் அரசின் சமீபத்திய முடிவு வெளிவந்துள்ளது.

முன்னதாக, 118 ஏக்கர் நிலத்தை நீர்ப்பரப்பாக மீட்டெடுப்பதற்குப் பதிலாக, தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறைக்கு மாற்றியதற்கான காரணத்தை விளக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசிடம் கேட்டிருந்தது.

சுருங்கி வரும் வேளச்சேரி ஏரி குறித்த செய்திகள் தொடர்பான வழக்குகளை இந்தத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. ஒரு காலத்தில் 255 ஏக்கராக பரவியிருந்த இந்த ஏரி, தற்போது ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாகச் சுருங்கிவிட்டது. இதில் கணிசமான பகுதிகள் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அரசு முகமைகளால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்வளத் துறை) கே. மணிவாசன் ஒரு பிரமாணப் பத்திரத்தில், CMDA-வின் 'ஏரி முகப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ் ₹23.5 கோடி மதிப்பிலான திட்டம், வேளச்சேரி ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்துவதற்காக ஏற்கனவே நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.

இது ஏரியின் கொள்ளளவை 22% அதிகரிக்கும். ஒரு விரிவான வெள்ளத் தணிப்பு முதன்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றியுள்ள குளங்களை புதுப்பிப்பதற்கான ஒரு விரிவான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், MRC-யின் வழக்கறிஞர் 1946-ல் கையெழுத்திடப்பட்ட அசல் 99 ஆண்டு குத்தகை 2045-ல் மட்டுமே முடிவடைகிறது என்று சுட்டிக்காட்டி, நிலத்தை முறையாக அரசு கைப்பற்றியது என்ற கூற்றை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் மேலும் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னையும் வெள்ளமும்:

என்னதான் சென்னையில் நிலத்தடி நீருக்கு பஞ்சம் இருந்தாலும், வெள்ளத்திற்கு பஞ்சம் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையுடன் சேர்ந்து, புயல் சின்னமும் சென்னைக்கு கூடுதல் மழையை கொடுக்கிறது. எனவே சென்னையில் இயல்பான அளவை விட அதிக அளவில் மழை பெய்கிறது. இந்த மழை வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. வெள்ளத்திற்கு மற்றொரு முக்கிய காரணம், சென்னையில் போதுமான அளவுக்கு வடிகால்வாய்கள் இல்லை என்பதுதான். எனவே கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலப்பரப்பை நீர்ப்பரப்பாக மாற்றுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+