கார் பேனட்டில் தொங்கியபடி.. உயிரைப்பணயம் வைத்த தலைமை காவலருக்கு.. விருது வழங்கி கவுரவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடத்தல்காரர்களைப் பிடிக்க கார் பேனட்டில் தொங்கியபடி உயிரைப் பணயம் வைத்துப் பிடித்த தலைமைக் காவலர் சரவணகுமாருக்குச் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் Star of the month பதக்கத்தை வழங்கினார்

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மூசா. ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

மேலும், செம்மகரட்டைகளை எரித்து அதை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் எடுத்து மேற்கொண்டு வருகிறார்.

 தொழிலதிபர் கடத்தல்

தொழிலதிபர் கடத்தல்

இந்நிலையில் கடந்த வாரம் தனது மகன் பஷீர் வீட்டுக்கு இவர் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இவரிடம் ஏற்கனவே பணியாற்றிய அறுப்பு குமார் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் இவரைக் கடத்தினார்கள். போரூரில் செட்டியார் அகரம் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் மூசா குடிபோதைக்கு அடிமையானவர் எனக் கூறி அடைத்து வைத்தனர். இந்தச் சூழலில் மூசாவின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

 பணம் கேட்டு மிரட்டல்

பணம் கேட்டு மிரட்டல்

கடத்தல்காரர்கள் முதலில் 5 கோடி ரூபாயைக் கேட்டு உள்ளனர். 5 கோடி ரூபாய் பணம் இல்லை என்று மூசாவின் குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், பின் அந்த தொகையில் ரூ 3 கோடி, 2 கோடி, ஒரு கோடி எனக் குறைத்துள்ளனர். இதற்கும் அவர்களது குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளாத நிலையில், கடைசியில் 25 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு மூசாவை விட அந்தக் கடத்தல் கும்பல் ஒப்புக்கொண்டது. பணத்தைத் தாம்பரத்திற்கு வந்த தர சொன் அந்த கும்பல் பிறகு போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டனர்.

 பதுங்கிய போலீசார்

பதுங்கிய போலீசார்

இதையடுத்து மூசாவின் மகன் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார். அதன்படி தாம்பரத்தில் போலீசார் மாறுவேடத்தில் மறைந்திருந்த கடத்தல்காரர்களிடம் பணத்தைக் கொடுக்க சென்றுள்ளார் மூசாவின் மகன் பஷீர். இருப்பினும், கடத்தல்காரர்கள் தாம்பரம் வரவில்லை. மாறாக மறுநாள் சென்னை எழும்பூரில் இருக்கும் தனியார் மால் அருகே பணத்தைத் தரக் கூறியுள்ளனர். அதன்படி மறுநாளும் போலீசார் மாறுவேடத்தில் மறைந்திருக்க பஷீர் பணத்தைக் கொடுத்துள்ளார்.

 சினிமா பாணியில் சேஸிங்

சினிமா பாணியில் சேஸிங்

அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கார்களில் சினிமா படப் பாணியில் கடத்தல் கும்பலை சேஸ் செய்து சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கடத்தல் கும்பல் காரில் ஏறி போலீசாரிடம் இருந்த தப்ப முயன்றது. அப்போது சேத்துப்பட்டு தலைமைக் காவலர் சரவணகுமார் சற்றும் யோசிக்காமல் அந்த காரின் பேனட்டில் குதித்து ஏறிவிட்டார். இருந்தும் கூட போலீசிடம் இருந்த தப்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் காரை எடுத்துச் சென்றுள்ளனர்.

 Star of the month பதக்கம்

Star of the month பதக்கம்

இப்படியே சில கிலோமீட்டர் வரை தலைமைக் காவலர் சரவணகுமார் காரில் தொங்கியபடியே சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், பொதுமக்கள் பலரும் உயிரைப் பணயம் கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமைக் காவலர் சரவணகுமாரைப் பாராட்டினர். இந்நிலையில் பெருநகர சென்னை போலீசின் Star of the month பதக்கம் கடத்தல்காரர்களைப் பிடிக்க கார் பேனட்டில் தொங்கியபடி சென்ற சேத்துப்பட்டு தலைமைக் காவலர் சரவணகுமாருக்கு வழங்கப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த பதக்கத்தை சரவணகுமாருக்கு வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+