சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? முன்னேற்பாடுகள் தீவிரம்.. தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!
சென்னை: சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்து வரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என்ற நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் ஆகிய மாநில கட்சிகளும், இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகிய தேசிய கட்சிகளும் பங்கேற்றன.
ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்இளங்கோ (திமுக), ஜெயக்குமார், இன்பதுரை (அதிமுக), தங்கபாலு, ராம்மோகன் (காங்கிரஸ்), கராத்தே தியாகராஜன் (பாஜ), ரவிக்குமார், குணவழகன் (விசிக), ஆறுமுகநயினார், சண்முகம் (மார்க்சிஸ்ட்), நல்லதம்பி, ஜனார்த்தனன் (தேமுதிக), சீமான், பாக்யராஜ் (நாம் தமிழர்), ஆனந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி), ஜோசப்ராஜா, வசீகரன் (ஆம்ஆத்மி), சீனிவாசன், அசோக்சாமி (தேசிய மக்கள் கட்சி) உள்ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள், கட்சி வாரியாக தனித்தனியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்தனர்.

தேர்தல் தேதி ஆலோசனை
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் முன்வைத்தனர். தேர்தல் ஆணையர், உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேதியை நிர்ணயிப்பதாக உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், சென்னை கமிஷனர் அருண், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்), அமலாக்க அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நோடல் அதிகாரிகள், ஐஜிகள், டிஐஜிகள் ஆகியோருடன் தேர்தல் திட்டமிடல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பராமரிப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள், தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி, பறிமுதல் நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு, வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கிய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், பயம் அல்லது பாரபட்சம் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
ஞானேஷ் குமார் பேட்டி
2வது நாளாக இன்று (27 ஆம் தேதி) சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அப்போது பேசிய அவர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பான ஜனநாயக பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
வெளிப்படைத்தன்மையுடன் நாட்டுக்கே முன்னுதாரணமான தேர்தலாக இந்த தேர்தல் நடத்தப்படும். தேர்தல் அதிகாரிகள் அச்சமின்றி செயல்படலாம்; சமூக ஊடகங்களில் பொய் செய்திகள் கண்காணிக்கப்படும். 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று மதியம் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, வங்கி அதிகாரிகள், தபால் துறை உள்ளிட்ட 23 தேர்தல் தொடர்பான விசாரணை முகமைகளின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த ஆலோசனையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் தலைமை தேர்தல் ஆணையர். அதன் பிறகு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Election-லிருந்து Escape சரி! 3000000 ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க கமல்? எதிர்ப்பார்ப்பில் மநீம -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா?












Click it and Unblock the Notifications