கொரோனா.. இதுவரை தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா?
சென்னை: கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை எவ்வளவு பணம் வந்துள்ளது என்பது குறித்த விவரத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நோய் தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளை கருத்தில் கொண்டும், ஏழை, எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைக்கும், தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மனமுவந்து நன்கொடை அளிக்க விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏப்ரல் இரண்டாம் தேதி வரையிலான நிலவரப்படி மொத்தம் 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் வரப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மூன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரையிலான காலகட்டங்களில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதி உதவி வழங்கியவர்களின் விவரங்களை நான் இதில் இணைத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்து சில நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.
#Corona வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 8, 2020
நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றி! pic.twitter.com/3xNAEFW3vs
பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மெட்ஸ் நிறுவனம், கவின்கேர் நிறுவனம், டைட்டன் நிறுவனம், லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும். நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் மனமார்ந்த நன்றி! இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications