முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் இன்று 7ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை முதல் மனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் முதல் நாளிலேயே போடிநாயக்கனூர் தொகுதியில் வேட்புமனு தக்கல் செய்தார். அதேபோல அதிமுக அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் வேட்புமனு தக்கல் செய்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் அவர் ஏழாவது முறையாகப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்றிரவு சேலம் சென்றார். இன்று காலை பெரியசோரகை சென்றாயபெருமாள் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தர். மேலும், இன்று மாலை எடப்பாடியில் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுனார்.












Click it and Unblock the Notifications