ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு! சட்டசபையில் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது
சென்னை: கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2000 ஆண்டுகளாக சமூக மற்றும் பொருளாதார ரீதியதாக ஒடுக்கப்பட்ட சமூகமாக இருந்த மக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இந்த ஒடுக்கு முறை அடுக்கின் முன்னணியில் இருக்கும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு சென்ற ஆதி திராவிடர் மக்களுக்கு இடஒதுக்கீடு என்பது வழங்கப்படவில்லை. அதாவது இந்த மதங்களில் ஆதி திராவிடர் என்கிற வேறுபாடு கிடையாது என மத்திய அரசு கூறிவருகிறது.

இந்த பிரச்னை நாடு முழுவதும் பல்வேறு மதங்களில் இருந்தது. உதாரணமாக சீக்கிய மதங்களில் இந்த பிரச்னை இருந்தபோது அம்மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து சீக்கியர்களாக மாறிய ஆதி திராவிடர் மக்களுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அதேபோல பௌத்த மதத்திலும் உள்ள ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு சென்ற ஆதி திராவிடர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
எனவே இந்த மதத்தில் உள்ள ஆதி திராவிடர் மக்கள் பட்டியல் சமூகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கடந்த 2004ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது தீர்மானத்தை வாசித்த அவர் "இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று கூறி இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி 3 முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது தீர்மானத்தை வாசித்த அவர் "இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று கூறி இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த தீர்மானம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி 3 முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications