நெருங்கும் லோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். இன்று தொடங்கும் பரப்புரை ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுகவை பொறுத்த அளவில், 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

1.வடசென்னை - கலாநிதி வீராசாமி
2.தென் சென்னை - தமிழச்சி தங்கப்பாண்டியன்
3.மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
5.காஞ்சிபுரம் - செல்வம்
6.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
7.திருவண்ணாமலை - அண்ணாதுரை
8.வேலூர் - கதிர் ஆனந்த்
9.தருமபுரி - ஆ.மணி
10.பெரம்பலூர் - அருண் நேரு
11.கள்ளக்குறிச்சி -கௌதம சிகாமணி
12.தேனி - தங்கதமிழ்ச்செல்வன்
13.சேலம் - செல்வகணபதி
14.ஈரோடு -பிரகாஷ்
15.நீலகிரி - ஆ.ராசா
16.பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி
17.தஞ்சாவூர் -முரசொலி
18.தென்காசி - ராணிஸ்ரீகுமார்
19.ஆரணி - தரணிவேந்தன்
20.தூத்துக்குடி - கனிமொழி
21.கோவை - கணபதி ராஜ்குமார்
என வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று முதல் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.
பரப்புரை திட்டத்தின்படி, திருச்சி மற்றும் பெரம்பலூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்கிறார். சனிக்கிழமை தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். திங்கட்கிழமை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.
அதைனை தொடர்ந்து வரும் 26ம் தேதி தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம், 27ம் தேதி தென்காசி மற்றும் விருதுநகர், மார்ச் 29ம் தேதி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி, 30ம் தேதி சேலம் என பரப்புரை மேற்கொள்கிறார். மேலும், வரும் 31ம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூரில் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர், ஏப்ரல் 2ம் தேதி வேலூர் மற்றும் அரக்கோணத்தில் பரப்புரையை மேற்கொள்கிறார்.
ஏப்ரல் 3ம் தேதி திருவண்ணாமலை மற்றும் ஆரணி, ஏப்ரல் 5ம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம், ஏப்ரல் 6ம் தேதி சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில், ஏப்ரல் 7ம் தேதி புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
அதனை தொடர்ந்து, ஏப்ரல் 9ம் தேதி மதுரை, சிவகங்கையிலும், ஏப்ரல் 10ம் தேதி தேனி, திண்டுக்கல்லிலும் ஏப்ரல் 12ம் தேதி திருப்பூர், நீலகிரியிலும் 13ம் தேதி கோவை மற்றும் பொள்ளாச்சியிலும் ஏப்ரல் 15ம் தேதி திருவள்ளூர், வடசென்னையிலும், 16ம் தேதி காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
இறுதியாக ஏப்ரல் 17ம் தேதி தென்சென்னை மற்றும் மத்திய சென்னையில் தனது பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார். தேர்தல் பரப்புரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் போது, காலத்தின் அருமை கருதி, கட்சியினர் வேறு எவ்வித நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என திமுக தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications