"19 பக்க புகார்" தமிழக ஆளுநருக்கு எதிராக குடியரசு தலைவருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் டெல்லியில் முகாமிட்டு இருக்கும் நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதால் இது தொடர்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது போக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது ஆளுநர் கருத்து தெரிவிப்பது ஆளும் திமுகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Chief Minister M.K.Stals letter to the President complaining about the Governor of Tamil Nadu

முதல்வர் மு.க ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களை கூட விமர்சிக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். வெளிநாட்டு பயணங்கள் செல்வதால் மட்டும் முதலீடுகள் வந்து விடாது ஆளுநர் பேசியிருந்ததும் அதற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் அளித்த பதிலும் மோதல் போக்கை இன்னும் அதிகரித்தது. இப்படி பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்தார். எனினும், தமிழக அரசு இது தொடர்பாக அரசாணை வெளியிட்டது. அடுத்த சில நாட்களில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக அறிவித்தார்.

ஆளுநருக்கு இப்படி ஒரு அதிகாரம் கிடையாது.. ஆளுநரின் முடிவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. எனினும், ஆளுநர் தனது முந்தைய உத்தரவை வெறும் 5 மணி நேரங்களில் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மேலும், இந்த உத்தரவு தற்காலிகமானதுதான் எனவும் 'செந்தில் பாலாஜி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அறிவுரை விளங்கியதாகவும் இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பதுதான் விவேகமாக இருக்கும் என உள்துறை அமைச்சர் கூறினார். எனவே அட்டர்னி ஜெனரலின் கருத்தை நான் பெற உள்ளேன்" என்று கூறியிருந்தார்.

ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில், திடீர் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

வரும் 13 ஆம் தேதி வரை டெல்லியில் முகாமிடும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சட்ட அமைச்சர் மற்றும் அட்டார்னி ஜெனரலையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், தமிழக ஆளுநர் மீது புகார் தெரிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதிய 19 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படாதத குறித்தும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கனவே தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+