ஆளுநர் விவகாரம்.. கருத்து கேட்ட குடியரசுத் தலைவர்.. கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் வழியாக விளக்கம் கேட்டுள்ள மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசமைப்பு நிலைப்பாட்டை தகர்க்க முயற்சிக்கும் குடியரசுத் தலைவர் குறிப்பை கண்டிப்பதாக கூறிய மு.க.ஸ்டாலின், ஆளுநர்கள் செயல்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிப்பதில் ஏன் ஆட்சேபணை இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Chief Minister MK Stalin condemns President droupadi murmu for asking explanation in the Tamilnadu governnor Case

தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையில் தொடக்கம் முதலே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வந்தார். நீண்ட காலமாக ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்ட நிலையில், தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தொடர்ந்து உச்சநீதிமன்றம், தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு ஒரு மாதம் வரையும், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப 3 மாதம் வரையும் கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிய வந்தது.

குடியரசுத் தலைவர் கேள்வி

இது தமிழக ஆளுநருக்கு மட்டுமல்லாமல், மத்திய அரசுக்கும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டு 14 கேள்விகளை எழுப்பி இருக்கிறார். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாத போது, உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா என்று 14 கேள்விகளை எழுப்பி இருந்தார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்த நிலையில் ஆளுநர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் வழியாக விளக்கம் கேட்டு உள்ள மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவில், தமிழக ஆளுநர் வழக்கு மற்றும் இன்னபிற வழக்குகளில் உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அரசமைப்பு நிலைப்பாட்டை தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் குடியரசுத் தலைவர் குறிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.

மத்திய அரசின் நடவடிக்கை

பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அரசமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்த்து வைத்ததை மாற்றும் முயற்சி இது. அதேபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பலவீனப்படுத்தும் முயற்சியை தவிர வேறு எதுவும் கிடையாது.

நியாயப்படுத்துகிறதா பாஜக?

அதுமட்டுமல்லாமல் அரசமைப்பு சட்டத்தின் மகத்துவத்தையும், உச்சநீதிமன்றத்திற்கும் நேரடியாக சவால் விடுத்ததை போல் குடியரசுத் தலைவரின் குறிப்பு அமைந்துள்ளது. ஆளுநர்கள் செயல்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிப்பதில் ஏன் ஆட்சேபணை இருக்க வேண்டும்? மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலமாக பாஜக ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்த முயற்சிக்கிறதா?

பாஜகவின் தீய நோக்கம்

மேலும், பாஜக அல்லாத மாநில அரசுகளின் சட்டசபையை பாஜக அரசு முடக்குவதற்கு முயற்சி செய்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் குறிப்புகளில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசமைப்பு அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, பாஜக அல்லாத மாநில சட்டசபையை செயலிழக்க செய்யும் பாஜக அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாடு வெல்லும்

மாநில சுயாட்சிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் இது. இப்படியொரு மோசமான சூழலில், பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களும் கட்சிகளின் தலைவர்களும் இந்த சட்டப் போராட்டத்தில் இணைய வேண்டும். இதனை எதிர்த்து முழு பலத்துடன் போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+