முதல்வர் ஸ்டாலின் உடல் நிலை சீராக உள்ளது..சில நாட்களுக்கு ஓய்வு தேவை - காவேரி மருத்துவமனை அறிக்கை
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என்றும் அந்த மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் மாலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்' என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், திமுக தொண்டர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்ததால் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
வீட்டில் இருந்து கொரோனா கவச உடையுடன் அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்பிவிடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
முதல்வர் உடல் நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், முதல்வர் நலமுடன் இருப்பதாகவும், அவர் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றுக்கான சிகிச்சைக்கள் அவருக்கு அளிக்கப்பட்டன. அவரது உடல் நலம் நன்கு தேறியுள்ளது. முதல்வர் நலமடைந்து வருகிறார். சில நாட்கள் ஒய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டிக்கிறோம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications