துக்ளக் ரமேஷ் மணிவிழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்.. மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்து
துக்ளக் ரமேஷ் மணிவிழாவில் முதல்வர் பங்கேற்று வாழ்த்து கூறினார்
சென்னை: துக்ளக் தமிழ் வார இதழின் தலைமைச் செய்தியாளர் ரமேஷின், மணிவிழாவில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
துக்ளக் இதழை சோ நடத்தத் தொடங்கியது முதல் அந்த இதழில் செய்தியாசிரியராக இருப்பவர் ரமேஷ்.. கடந்த கால் நூற்றாண்டை ஒட்டி ஒரே பத்திரிகையில் அவர் இருப்பதால் துக்ளக் ரமேஷ் என பெயர் வந்தது.

தலைமை செயலகத்திலேயே இவரது பணி என்பதால், அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் பரிச்சயமானவர்..
இவரது மகன் திருமணம் கடந்த 2019-ல் நடந்தது.. அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பெஞ்சமின், சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.. அப்போது மணமக்களை வாழ்த்திவிட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.. இதே நிகழ்வுக்கு குருமூர்த்தியும் அப்போது வந்திருந்தார்..
ஆனால், ஓபிஎஸ்ஸும், குருமூர்த்தியும் ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதை தவிர்த்துவிட்டனர். இந்த நிகழ்வு அப்போதைய பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றுள்ளது.. இந்நிலையில், துக்ளக் தமிழ் வார இதழின் தலைமைச் செய்தியாளர் ரமேஷ் தன்னுடைய மணிவிழாவை கொண்டாடுகிறார்..
இந்த மணி விழாவில் முதல்வர் ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு ரமேஷ் தம்பதிக்கு வாழ்த்து சொன்னார்.. பிறகு, மரக்கன்று பசுமைக்கூடை அவர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.முதல்வர் ஸ்டாலினுடன் துரைமுருகனும் உடன் சென்றிருந்து ரமேஷூக்கு வாழ்த்து சொன்னார்.
சமீப காலமாகவே முதல்வர் ஸ்டாலின் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், மரக்கன்று பசுமைக்கூடை வழங்குவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.. அதுபோலவே உதயநிதி ஸ்டாலினும் பசுமைக்கூடை விழாக்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் செல்லும்போதெலலாம் இதே மரக்கன்று பசுமைக்கூடையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications