ஸ்டாலினுக்கு இன்று முக்கியமான நாள்.. திடீரென கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி
சென்னை: திமுக தலைவராக 6ம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திராவிட முன்னேற்ற கழக தலைவராக பொறுப்பேற்று ஆறாம் ஆண்டு தொடங்கியதையொடடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டான் இன்று (28.08.2023) முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்,

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ பெரியசாமி, எவே வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு உள்பட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர். சென்னை மேயர் பிரியாவும் பங்கேற்றார்.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திமுகவின் முதல் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு திமுகவின் தலைவரானார். திமுகவின் தலைவராகி 6 வருடம் நிறைவு பெற்றுள்ள நிலையில், அவர் கடந்த வந்த பாதைகள் சிலவற்றை பாப்போம். ஸ்டாலின் முதல் முதலாக 1984ம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1984ம் ஆண்டே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்தார். அதன்பிறகு 1989, 1996, 2001 மற்றும் 2006ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 இல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 மற்றும் 2021 ம் ஆண்டிலும் கொளத்தூர் தொகுதியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
இடையில் 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை சென்னை மேயராக இருந்தார். 2001ம் ஆண்டு சென்னை மேயராக வெற்றி பெற்ற ஸ்டாலின், அப்போதை ஜெயலலிதா அரசு கொண்டு வந்த ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டம் காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாக தொடர்ந்தார். 2006ம் ஆண்டில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார். 2009ல் துணை முதல்வரானார்.
இந்நிலையில் 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று தமிழக முதல்வராக உள்ளார் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் திமுகவின் தலைவரானபிறகு 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தல் 39 தொகுதிக்கு 38 தொகுதியில் திமுக வென்று இருந்தது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக மட்டுமே 133 இடங்களில் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக ஆறு ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், இன்று கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications