எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும்.. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலமைப்பு சட்ட விதிகள் அரசியல் ஆக்கப்படுகின்றன என்ற குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும் என்றும், ஆட்சியை நடத்த வேண்டியது அலங்கார நியமனப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல என்றும் சாடினார். மேலும் எவ்வளவு உயர் பதவியில் இருப்பவர்கள் என்றாலும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், அவற்றுக்கு அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம்ஒப்புதல் அளித்தது.

MK Stalin Jagdeep Dhankhar governor

மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தனர். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மசோதாக்களை கிடப்பில் போடும் ஆளுநர்களுக்கும், மத்திய அரசுக்கும் கடிவாளம் போடும் வகையிலான இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன.

ஜெகதீப் தன்கர் ஆவேசம்

ஏனெனில் முன்னதாக குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்களை வழங்கியது மிகவும் அரிதும் அரிதான நிகழ்வுகளில் மட்டுமே நடந்துள்ளன. இந்நிலையில் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியதற்கு குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்தார். மாநிலங்களவை பயிற்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் நேற்று பேசும்போது அவர் கூறுகையில், "சட்டம் இயற்றும், நிர்வாக நடைமுறையை செயல்படுத்தும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்முடைய நாட்டில் இருக்கிறார்கள். நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது என்பதால் அவர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது.

அரசியல் சட்டப்பிரிவு 142

அரசியல் சட்டப்பிரிவு 142, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஒரு அணு ஏவுகணையாக மாறி உள்ளது. அது நீதித்துறையிடம் எப்போதும் இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? இதில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா, இல்லையா? என்பதற்கான கேள்வி அல்ல. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க குடியரசுத் தலைவர் அறிவுறுத்தப்படுகிறார். இல்லையென்றால் அது சட்டமாகிறது. என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு தருணத்தை பார்ப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை.

குடியரசுத் தலைவர் பதவி

இந்தியாவில் குடியரத் தலைவர் என்பது மிகவும் உயர்ந்த ஒரு பதவி. அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், பராமரிப்பதாகவும் கூறி அவர் பதவியேற்றுள்ளார். துணை குடியரசுத் தலைவர், அமைச்சரகள் உள்ளிட்ட எம்பிக்கள் மற்றும் நீதிபதிகள், அந்த அரசியல் சாசனத்துக்கு அடிபணிவதாக உறுதியேற்று பதவி ஏற்கிறார்கள்.

ஐந்து நீதிபதிகள்

எந்த அடிப்படையிலும் குடியரசுத் தலைவருக்கு அறிவுறுத்தும் நிலை இருக்கக்கூடாது. அரசியலமைப்பின் கீழ் உங்களுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3)-ன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே ஆகும். அதுவும் 5 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அதில் இருக்க வேண்டியது அவசியம். மேலும் செயல்முறையில் பொறுப்புக்கூறல் கொள்கை உள்ளது. நாடாளுமன்றத்தில் நீங்கள் கேள்விகள் கேட்கலாம். ஆனால் நீதித்துறையால் நிர்வாகம் நடத்தப்படுமானால், நீங்கள் எப்படி கேள்விகள் கேட்பீர்கள்? தேர்தல்களில் யாரை நீங்கள் பொறுப்பேற்க வைப்பீர்கள்?

நல்லது கிடையாது

நமது மூன்று நிறுவனங்களான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்பு மலர வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒன்று மற்றொன்றின் களத்தில் ஊடுருவினால் அது ஒரு சவாலை ஏற்படுத்தும். அது நல்லது கிடையாது" இவ்வாறு துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று ஆவேசமாக பேசினார்.

திமுக எதிர்ப்பு

இந்த விவகாரம் தொடர்பாக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்து அறமற்றவை என்று திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா அறமற்றது என்று எதிர்ப்பு தெரிவித்தார். அரசியல் அமைப்பே உயர்ந்தது என்பதை நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய அமைப்புகள் மறந்துவிடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

தலையங்கம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சனம் செய்ததற்கு பதில் அளிக்கும் வகையில் பிரபல ஆங்கில செய்திதாளில் தலையங்கம் வந்திருந்தது.இதை பாராட்டி பத்திரிக்கையாளர் ராஜ்தீப் தர்சாய் கருத்துக்களை கூறியிருந்தார். இதை ரீடுவீட் செய்திருந்த முதல்வர் ஸ்டாலின், அதில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துககு பதிலடி தரும் வகையில் சில கருத்துக்களை கூறியிருந்தார்.

ஸ்டாலின் பதில்

அந்த பதில் அவர் கூறுகையில், நம் நாடு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், வலதுசாரி கதைகளை பொது விவாதத்தில் புகுத்தவும் ஆளுநர்கள், துணை குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அரசியலமைப்பு அலுவலகங்ள் அரசியல் மயமாக்கப்படுவது அதிகரித்துவிட்டது.

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்

ஒரு ஜனநாயகத்தில், அரசாங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்பட வேண்டும், சம்பிரதாயபூர்வமாக நியமிக்கப்படுபவர்களால் அல்ல. யாரும், எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு மேலே இருக்க முடியாது. இதையே நமது மாண்புமிகு உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும்.

நிலைகுலைய வைத்துள்ளது

எனவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்திருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்தச் சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+