நாடு முழுவதும் பயணம்.. அனைத்து கட்சிகளையும் மு.க.ஸ்டாலின் சந்திக்க வேண்டும்.. திருமாவளவன் கருத்து!
மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: 2024ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் இணைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேபோல் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல்
இந்தப் பொதுக்கூட்டமாக மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியாகவும் அமைந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2024ல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சியமைக்க கூடாது என்பதே முக்கியம். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டு காலமாக திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம்.

காங்கிரஸ் அல்லாத கூட்டணி
தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். அதேபோல், காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.

மூன்றாவது அணி?
இதன் மூலம் மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் மறைமுகமாக எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சந்திரசேகர் ராவ் ஏற்கனவே அதற்கான பணிகளை தொடங்கி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோரை சந்தித்தார்.

திருமாவளவன் கருத்து
இந்த நிலையில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது என்று மு.க.ஸ்டாலின் பேசி இருப்பது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். திருமாவளவன் கூறுகையில், 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சித் தலைவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க வேண்டும். இதற்காக நாடு முழுவதும் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications