முதல்வர் ஸ்டாலின் சொன்ன ‘ஆட்டுக்குட்டி’ கதை.. ஆரவாரம் செய்த மாணவிகள்.. ‘கருணாநிதி சொன்னது- இது கடமை’
சென்னை : திமுக அரசின் 'புதுமைப்பெண்' திட்ட தொடக்க விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன 'ஆட்டுக்குட்டி' கதை அங்கு கூடியிருந்த மாணவிகளைக் கவர்ந்தது.
சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கான'புதுமைப் பெண்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாணவிகள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி பற்றி விளக்க, ஆட்டுக்குட்டி கதை ஒன்றைக் கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சமூக நீதியை விளக்குவதற்காகச் சொன்ன இந்தக் கதையை எடுத்துரைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

புதுமைப்பெண் திட்டம்
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணம் உதவித் திட்டத்தை மாற்றி, அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள், உயர்கல்வியில் சேர்ந்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உறுதித்தொகை பெறுவார்கள்.

தொடங்கி வைத்த ஸ்டாலின்
ஆசிரியர் தினமான நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை சென்னை ராயபுரத்தில் பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கி வைத்தார். அப்போது மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை வழங்கினார். இமேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆடு கதை
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சொன்ன ஆடு கதை அனைவரையும் கவர்ந்தது. "சமூகநீதி என்றால் என்ன என்பதற்கு தலைவர் கலைஞர் ஒரு உதாரணத்தைச் சொன்னார். 'மந்தைகளில் இருந்து ஆடுகளை ஓட்டிவரும் மேய்ப்பன், ஒரே ஒரு ஆட்டை மட்டும் தனது தோளில் தூக்கி வருவான். அந்த ஆடு நடக்க முடியாததாக இருக்கும்; அல்லது காலில் காயம்பட்டதாக இருக்கும்.

முதல்வர் சொன்ன சமூக நீதி கதை
அப்படி தோளில் தூக்கி எடுத்து வருவது அந்த ஆட்டுக்குக் காட்டும் சலுகை அல்ல, அந்த மேய்ப்பரின் கடமை ஆகும். அதுதான் சமூக நீதி' என்றார். அத்தகைய கடமை 'திராவிட மாடல்' தமிழ்நாடு அரசுக்கு இருப்பதால் தான் நாம் இத்தகைய திட்டங்களைத் தீட்டி வருகிறோம். ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவிகள் உயர்கல்வி கற்பதற்கு புதுமைப் பெண் திட்டம்பெரிதும் உதவிகரமாக இருக்கும்." எனக் கூறினார்.

தெளிவான விளக்கம்
இந்த விழா அரங்கில் கூடியிருந்த மாணவிகளுக்கு, சமூக நீதியை எளிதாக விளக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்ன கதையை எடுத்துச் சொன்ன முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் மத்தியில் பெரும் ஆரவாரம் எழுந்தது. மேலும், முதல்வர் சொன்ன இந்தக் குட்டிக்கதை வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications