முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் உடல்நிலையில் முன்னேற்றம்! அப்போலோவிற்கு குடும்ப உறவுகள் விசிட்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாரும், மறைந்த கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 9ஆம் தேதி அன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடிய தயாளு அம்மாள் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே மறதி நோயாலும், வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளாலும் அவதிப்பட்டு வரும் அவர் உணவு ஒவ்வாமை காரணமாக நேற்றைய தினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தயாளு அம்மாள் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதோடு தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். தயாளு அம்மாளுக்கு 90 வயது என்பதால் எல்லோருக்கும் போல் அவருக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அவரது உடல் எந்த மருந்தை ஏற்கும் எந்த மருந்தை ஏற்காது என்பதை ஆலோசித்து அதற்கேற்ப மருத்துவர்கள் மருந்துகளை கொடுத்து வருகின்றனர்.
தாயார் தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். நேற்றைய தினத்தைக் காட்டிலும் இன்று தயாளு அம்மாளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதனிடையே குடும்ப உறவுகளும் அப்போலோ மருத்துவமனைக்கு விசிட் அடித்து தயாளு அம்மாள் உடல் நலம் பற்றி விசாரித்து வருகிறது. அம்மாவை பார்ப்பதற்காக மு.க.அழகிரி இன்று அப்போலோ மருத்துவமனைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications