சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டின் தானியங்கள்! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த ஸ்பெஷல் பரிசுப் பெட்டகம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் தானியங்கள் அடங்கிய ஸ்பெஷல் பெட்டகத்தை பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.

Recommended Video

    தில்லியில் MK Stalin செய்தியாளர் சந்திப்பு

    தனக்காக கொண்டுவரப்பட்ட தமிழ்நாட்டின் தானியங்கள் அடங்கிய பரிசுப் பெட்டகத்தை பிரதமர் மோடி கண்கள் விரிய ஆச்சரியத்துடன் பார்த்தார்.

    இதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலினை சிரித்த முகத்துடன் வாஞ்சையுடன் வரவேற்று பல்வேறு விவகாரங்கள் பற்றி ஆலோசித்தார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு! நீட் தேர்வு விலக்கை நினைவூட்டி கோரிக்கை மனு அளிப்பு! பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு! நீட் தேர்வு விலக்கை நினைவூட்டி கோரிக்கை மனு அளிப்பு!

    டெல்லி பயணம்

    டெல்லி பயணம்

    கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தச் சந்திப்பின் போது பிரதமருக்கு சிவப்பு நிற பொன்னாடை அணிவித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திலிருந்து எடுத்துச் சென்றிருந்த ஸ்பெஷல் கிஃப்ட் ஒன்றையும் பிரதமருக்கு வழங்கினார்.

    ஸ்பெஷல் கிஃப்ட்

    ஸ்பெஷல் கிஃப்ட்

    அந்த ஸ்பெஷல் கிஃப்ட் என்னவென்றால், நெல், கேழ்வரகு உள்ளிட்ட தமிழகத்தில் விளைந்த சிறு தானியங்கள் அடங்கிய பெட்டகம் தான். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி கண்கள் விரிய ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், அதனை இன்முகத்தோடு ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இதுவரை யாரும் வழங்காத பரிசை பிரதமருக்கு வழங்கி தேசியளவில் கவனம் ஈர்த்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    9 வகையான தானியங்கள்

    9 வகையான தானியங்கள்

    மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரக சம்பா, குள்ளக்கார், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, என 9 வகையான சிறுதானியங்கள் மற்றும் நெல் வகைகள் அந்த பரிசுப் பெட்டகத்தில் இடம் பெற்றிருந்தன. இவைகள் எல்லாமே தமிழகத்தின் பாரம்பரிய தானிய வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முக்கிய நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றையும் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசாக அளித்தார்.

    சிரித்த முகம்

    சிரித்த முகம்

    முதலமைச்சர் ஸ்டாலினை சிரித்த முகத்துடன் வரவேற்ற பிரதமர் மோடி சிரித்த முகத்துடனே பேசி வழியனுப்பி வைத்தார். இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் உரிமை சார்ந்த சில கோரிக்கைகளையும் முன் வைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

    English summary
    Chief Minister Stalin gifted grains of Tamil Nadu to PM Modi: பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் தானியங்கள் அடங்கிய ஸ்பெஷல் பெட்டகத்தை பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X