திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏர் சர்.பிட்டி.தியாகராயர்! வெள்ளுடை வேந்தரை நினைவுகூர்ந்த ஸ்டாலின்!
சென்னை: திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏர் சர்.பிட்டி.தியாகராயர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சர். பிட்டி. தியாகராயர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு;

"திராவிட வீரனே விழி, எழு, நட!" எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் பிறந்தநாள்!
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி, இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் அவர்!
அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம்! தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்போம்! இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மேலும், சர்.பிட்டி.தியாகராயர் பற்றி அண்ணா கூறியதையும் மேற்கோள்காட்டி பதிவு வெளியிட்டிருந்தார். அதன் விவரம் வருமாறு;

''தியாகராயர்தான் நாம் வெற்றி மேல் வெற்றி பெற வழிகாட்டினார். இருட்டு அறைகளிலும் காட்டு நிலத்திலும் கூட்டம் கூடி இயேசுநாதர் உபதேசத்தைக் கேட்டு உலகம் உயர்ந்ததுபோல, தியாகராயரின் சொற்கள் தென்னாட்டில் மெள்ள மெள்ள ஏழை எளியோர் குடிசையில் குடி புகுந்து பின்னர் மாளிகைகளிலெல்லாம் சென்று மக்கள் மன்றத்திலே புதியதோர் எழுச்சியை உண்டாக்கிவிட்டது.
தியாகராயர் புதுமை பல செய்து காட்டினார். அதிலே தலைசிறந்த புதுமைதான் இந்தப் பார்ப்பனரல்லாதார் புரட்சி. அது மிக அபூர்வமான வெற்றியைத் திராவிடருக்குத் தந்தது."
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications