தமிழகத்தில் இன்று திறக்கப்பட்ட 9 புதிய பாலங்கள்! போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை!
சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 9 பாலங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் அவர் இந்த பாலங்களை திறந்து வைத்தார்.
அதன் விவரம் வருமாறு;

நெடுஞ்சாலைத் துறை
நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே மேம்பாலங்கள், ஒரு இரயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய ஒன்பது பாலங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

ரயில்வே மேம்பாலம்
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை- பொன்னேரிக்கரை - காஞ்சிபுரம் சாலையில் இரயில்வே கடவு எண் 29-க்கு மாற்றாக
59 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; மதுரை மாவட்டம், மதுரை - தொண்டி சாலை மற்றும் மதுரை சுற்றுச் சாலை சந்திப்பில் 53 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வழிச்சாலை மேம்பாலம்;

கோவை மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில், இரயில்வே கடவு எண் 122-க்கு மாற்றாக பொள்ளாச்சி கிணத்துக்கடவு இரயில் நிலையங்களுக்கு இடையே 48 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; திருவண்ணாமலை மாவட்டம், பாண்டி - கிருஷ்ணகிரி சாலை இரயில்வே கடவு எண்.55-க்கு மாற்றாக தண்டரை - திருவண்ணாமலை இரயில் நிலையங்களுக்கு இடையே 38 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்;

புதிய பாலங்கள்
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி இரயில் நிலையங்களுக்கு இடையே கடவு எண் 36-க்கு மாற்றாக ஊரப்பாக்கம் சாலையில், 34 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; விழுப்புரம் மாவட்டம், கடலூர் - சித்தூர் சாலையில், இரயில்வே கடவு எண்.144-க்கு மாற்றாக 22 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்;

உயர்மட்டப் பாலம்
வேலூர் மாவட்டம், காட்பாடி - குடியாத்தம் சாலையிலிருந்து விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில், லத்தேரி மற்றும் விரிஞ்சிபுரம் இரயில்வே நிலையங்களுக்கு இடையே உள்ள கடவு எண் 59-க்கு மாற்றாக 22 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்;
திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை - எரையூர் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே 17 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம்;

8 மாவட்டங்கள்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி - ஏர்வாடி - வள்ளியூர் - விஜயாபதி சாலையில் இரயில்வே கடவு எண்.82பி-க்கு மாற்றாக
14 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே கீழ்ப்பாலம்; என மொத்தம் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒன்பது பாலங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி - ஏர்வாடி - வள்ளியூர் - விஜயாபதி சாலையில் இரயில்வே கடவு எண்.82பி-க்கு மாற்றாக
14 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே கீழ்ப்பாலம்; என மொத்தம் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒன்பது பாலங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

போக்குவரத்து நெரிசல்
இரயில்வே கடவுகளில் கட்டப்பட்டுள்ள பாலங்களால் இரயில்வே கடவுகளில் காத்திருப்பு நேரம் தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறைவதுடன், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பாதுகாப்புடன் பயணம் செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications