சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவால் களைகட்டிய தலைநகரம்! 5 நாள் கலைவிழாவை தொடங்கி வைத்த முதல்வர்!
சென்னை: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வரும் 17ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை 40 வகையான கலை விழாக்கள் நடைபெறவுள்ளன.

இது தொடர்பான விவரம் வருமாறு;
சென்னை தீவுத்திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் 40 வகையான கலைகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா"-வை முதலமைச்சர்ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
சென்னை மாநகரில், தீவுத்திடல், கொளத்தூர் - மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் (தெற்கு) முரசொலிமாறன் மேம்பாலப் பூங்கா, இராயபுரம் - ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் - நாகஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் - மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், சிந்தாதிரிப்பேட்டை - மாநகராட்சி விளையாட்டு மைதானம், தி.நகர் நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை - மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே. நகர் - சிவன் பூங்கா, வளசரவாக்கம் - இராமகிருஷ்ணா நகர் விளையாட்டு மைதானம், அண்ணா நகர் - கோபுரப் பூங்கா, கோயம்பேடு - ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் - எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் - அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா 14.1.2023 முதல் 17.1.2023 வரை மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறும்.

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில், நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவியாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், தோடர் நடனம், மயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட 40 வகையான கலைகளுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த விழாவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், ராமச்சந்திரன்,சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கிரிராஜன், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications