மீண்டும் பழைய பரபரப்புக்கு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின்! ஓய்வுக்கு குட் பை கூறிவிட்டு தொடர் ஆய்வு!
சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது மீண்டும் பழைய பரபரப்புக்கு திரும்பியிருக்கிறார்.
தொடர்ந்து ஆய்வு, ஆலோசனைக் கூட்டங்கள், சந்திப்புகள், என கொரோனா பாதிப்புக்கு முன்பு எப்படி பரபரப்பாக இயங்கினாரோ இப்போது அதே போல் ஆக்டிவாக இயங்க ஆரம்பித்துள்ளார்.
என்னதான் மருத்துவர்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினாலும் கூட மழை வெள்ள முன்னெச்சரிக்கை, மீட்புபணிகள் ஏற்பாடு, புதிய திட்டங்களை தொடங்கி வைப்பது என பிஸியாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

மிகவும் சுறுசுறுப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை எப்போதுமே சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் இயங்கக் கூடியவர். வாரத்திற்கு 2 நாட்களாவது வெளியூர் சுற்றுப்பயணங்கள் சென்று மக்களை நேரடியாக சந்திப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். இந்நிலையில் அண்மையில் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அவரது உடல் நலிவடைந்தது. காவிரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வில் இருந்து வந்தார்.

முதல்வர் நிகழ்ச்சிகள்
கொரோனா பாதிப்புக்கு முன்னர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டதை போல் இல்லாமல் முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டும் கடந்த சில நாட்களாக கலந்துகொண்டு வந்தார். அதேபோல் அவரது அனைத்து வெளியூர் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இப்போது அவரது உடல்நலம் தேறியிருப்பதால், மீண்டும் பழையபடி ஆக்டிவாக இயங்க ஆரம்பித்துள்ளார். தலைமைச் செயலகத்திற்கு வந்து ஆய்வு, ஆலோசனைக் கூட்டங்கள், சந்திப்புகள், என சகஜமான பணிகளை கவனித்து வருகிறார்.

வெளியூர் பயணங்கள்
மருத்துவர்கள் ஒப்புதல் பெற்ற பிறகு விரைவில் வெளியூர் சுற்றுப் பயணங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதும் கூட ஒரு சில மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட அவர் தயாராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தான் தற்போதைய சூழலில் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

நாடாளுமன்றத் தேர்தல்
ஆட்சிப்பணிகளில் எந்தளவுக்கு கவனம் செலுத்துகிறாரோ அந்தளவுக்கு கட்சிப்பணிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் தமிழகத்தில் 39க்கு 39 தொகுதிகளையும் பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்திருக்கிறார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications